நாகை கடற்படை அலுவலகத்தில் அதிகாலையில் துப்பாக்கி சூடு.. தமிழ்நாட்டு அதிகாரி சுட்டு தற்கொலை.. ஷாக்
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் இந்திய கடற்படை அலுவலகத்தில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கடற்படை காவலர் ராஜேஷ் அதிகாலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் தற்கொலையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

நாகை இந்திய கடற்படை அதிகாரிகள் இந்த துப்பாக்கி சூடு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவரின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
இந்திய பாதுகாப்பு படை முகாம்களில் இது போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து உள்ளன.
துப்பாக்கி சூடு:
பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 தமிழக வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் .
நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் பலியான 4 பேரில் 2 வீரர்கள் தமிழர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பஞ்சாப் பதிண்டாவில் உள்ள முகாமில் இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டை சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் ஆகியோரின் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். துப்பாக்கி சூடு தீவிரவாத தாக்குதல் கிடையாது என்று காவல்துறை விளக்கம் அளித்துள்ளனர்.துப்பாக்கி சூட்டிற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குன்னர் தேசாய் மோகன் என்று றானுக வீரர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அங்கே இரண்டு பேர் குர்தா அணிந்து தப்பி ஓடியதாக இவர் பொய்யான வாக்குமூலம் கொடுத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச்சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த கமலேஷ், யோகேஷ்குமார் மோசமாக காயம் பட்டு, குண்டுகள் துளைக்க உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த கமலேஷ் மேட்டூர் அருகே வனவாசி பனங்காடு பகுதியை சேர்ந்தவர் என்று ராணுவம் சார்பாக தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.
அதேபோல் பலியான மற்றொரு வீரர் யோகேஷ்குமார் தேனி மாவட்டம் மூணாண்டிபட்டியை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. பஞ்சாப்பில் ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இப்படி ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக தமிழக வீரர்கள் இருவர் மரணம் அடைந்த சம்பவம் அவர்களின் கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணுவ வீரர்கள் ரோந்தில் பயன்படுத்தும் INSAS துப்பாக்கி மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

தாக்குதல்
முதலில் INSAS துப்பாக்கி காணாமல் போய் இருந்தது. அதன்படி போலீசார் தீவிரமாக தேடி, தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட INSAS துப்பாக்கியை கண்டுபிடித்தனர்.
அங்கே இருக்கும் சிலர் மாஸ்க் அணிந்து இந்த துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர் என்று கூறப்பட்டது. கடைசியில்தான் இது ஒரே நபர் மூலம் செய்யப்பட்ட தாக்குதல் என்று கண்டறியப்பட்டது. உள்ளே வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலை 4.20 மணிக்கு இந்த தாக்குதல் நடந்து உள்ளது. அதனால் இது கோபத்தில் நடந்த தாக்குதல் கிடையாது. கண்டிப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 2 தமிழர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications