வேதாரண்யம் கலவரத்தில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை.. உடனடியாக புதிய சிலை நிறுவிய தமிழக அரசு!
வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
Recommended Video
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
நேற்று வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. வேதாரண்யத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அங்கு ஜீப்பில் வந்த ஒருவர் சாலையில் நடந்து சென்ற ஒருவர் மீது தவறுதலாக மோதியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட சண்டை பெரிய கலவரமாக மாறியது. இரண்டு பிரிவை சேர்ந்த மக்களுக்கு இடையில் இதனால் பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் ஒரு கார் மற்றும் பைக் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதையடுத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இரண்டு பிரிவினரும் மாறி மாறி பொது சொத்துக்களை சேதப்படுத்தி சண்டை போட்டு உள்ளனர். ஒரு பிரிவினர் அந்த பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்தனர். அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதால் வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சிலை உடைப்பிற்கு எதிராக மக்கள் அங்கு போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் அங்கு நிமிடத்திற்கு நிமிடம் சூழ்நிலை பரபரப்பாக நீடித்தது. இதனால் தற்போது வேதாரண்யத்தில் உடைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.
தமிழக அரசு சார்பில் விரைவாக புதிய சிலை நிறுவப்பட்டது அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதற்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் உடனடியாக புதிய சிலை நிறுவப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications