ஆகஸ்ட் 29ல் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை! வேளாங்கண்ணி சர்ச் விழாவையொட்டி நாகை கலெக்டர் அறிவிப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை மற்றும் கீழ் வேளூர் தாலுகாவில் இருக்கும் பள்ளி - கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி விடுமுறை அளித்து கலெக்டர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழாவின் கொடியேற்றத்தையொட்டி இந்த விடுமுறை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மிகவும் பிரசித்திப்பெற்ற தேவாலயங்களில் ஒன்று வேளாங்கண்ணி சர்ச். நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த சர்ச் அமைந்துள்ளது. இங்கு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த வேளாங்கண்ணி சர்ச்சில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாள் திருவிழா என்பது மிகவும் கோலாகலமாக நடக்கும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சர்ச்சின் 10 நாள் திருவிழா வரும் ஆகஸ்ட் 29 ம் தேதி தொடங்குகிறது.
ஆகஸ்ட் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த திருவிழா என்பது தொடங்க உள்ளது. இந்த திருவிழா செப்டம்பர் மாதம் 8 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழாவையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 2 தாலுகாக்களில் அமைந்திருக்கும் பள்ளி - கல்லூரிகளுக்கு ஆகஸ்ட் மாதம் 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றத்தையொட்டி நாகப்பட்டினம் மற்றும் கீழ்வேளூர் தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. இந்த 2 தாலுகாக்களிலும் ஆகஸ்ட் 29ம் தேதிக்கான விடுமுறையை ஈடு செய்யும் வகையில் செப்டம்பர் மாதம் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications