திண்ணையில் தூக்கில் தொங்கிய இளம்பெண்.. காட்டுக்குள் காதலனின் சடலம்.. பரபரக்கும் கீழ்வேளூர்

காதலி இறந்த சோகத்தில் காதலனும் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: காதலி தற்கொலை வழக்கில் இளைஞரும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரைச் சேர்ந்தவர் வினித் குமார்... 25 வயதாகிறது.. இவர் சுபஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்தார்..

சுபஸ்ரீ அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.. தினமும் ஸ்கூலுக்கு போகும்போது, இவர்களிடையே இருந்த நட்பு காதலாக மாறி உள்ளது.

 மனஉளைச்சல்

மனஉளைச்சல்

ஆனால், இவர்களுக்குள் திடீரென ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது.. அதனால் கடந்த சில தினங்களாகவே சுபஸ்ரீ மன உளைச்சலுக்கு ஆளாகி வந்ததாக தெரிகிறது.. இதனால் சில நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... தான் அணிந்து இருந்த சுடிதாரின் துப்பட்டாவில் திண்ணை தாழ்வாரத்தில் தூக்குப்போட்டுக்கொண்டார்.

புகார்

புகார்

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சுபஸ்ரீயை மீட்டு சிகிச்சைக்காக கீழ்வேளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தினால் நிலைகுலைந்துபோன சுபஸ்ரீயின் பெற்றோர், தங்கள் மரணத்திற்கு காரணம் வினோத்குமார் தான் என்று சொல்லி கீழ்வேளூர் போலீசில் புகார் தந்தனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

போலீசாரும் அந்த புகாரின்பேரில் வினித்குமார் குடும்பத்தினரிடம் விசாரித்து வந்துள்ளனர். ஆனால், சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் இருந்தே வினித்குமார் விலகவில்லை.. தினமும் இதே கவலையிலும் சோகத்திலும் அதிர்ச்சி விலகாமல் இருந்து வந்துள்ளார்.. இது தொடர்பாக போலீசாரும் விசாரித்து விட்டு சென்றதால் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது..

 விசாரணை

விசாரணை

இதனால் வீட்டின் பக்கத்தில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்று அங்கிருந்த கருவேலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... இதையடுத்து கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வினித்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்...

கலக்கம்

கலக்கம்

நாகையில் கடந்த சில காலங்களாகவே தற்கொலைகளும் வன்முறை சம்பவங்களும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புதுமண பெண் ஒருவர் 4 நாளைக்கு முன்பு தற்கொலை செய்திருந்தார்.. அதேபோல விரும்பிய பாடத்தை ஏற்று படிக்க முடியவில்லை என்று ஒரு மாணவியும் கடந்த வாரம் தற்கொலை செய்திருந்தார்.. தொடர்ந்து நடந்து வரும் தற்கொலைகளால் அந்த மாவட்ட மக்கள் கலங்கி போயுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+