அப்பதான் கணவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் ஒரு பஸ் இப்படி ஏறி இறங்கும் என எதிர்பார்க்கலை
போலீஸ்காரர் மீது பஸ் மீது ஏறி இறங்கியதில் உயிரிழந்தார்
Recommended Video
நாகை: அப்பதான் போலீஸ்கார கணவனை வேலைக்கு வழியனுப்பி வைத்தார் மனைவி.. ஆனால் பஸ்ஸின் சக்கரம் இப்படி மொத்தமாக கணவனின் உடம்பில் ஏறி இறங்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் காட்வின் டோனி. இவருக்கு 28 வயதாகிறது. நாகர்கோவில் ஆயுதப்படை போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார்.
வீட்டில் இருந்து நாகர்கோவிலுக்கு பைக்கில்தான் தினமும் செல்வார். 5 மாசத்துக்கு முன்னாடிதான் இவருக்கு திருமணம் ஆனது. மனைவி பெயர் ஆஷா.

களியக்காவிளை
இந்நிலையில், இன்று காலை காட்வின் டோனி, வழக்கம்போல வேலைக்கு பைக் எடுத்து கொண்டு கிளம்பினார். தக்கலையை அடுத்த புலியூர்குறிச்சி-கொல்லவிளை இடையே அவர் வந்த கொண்டிருந்தபோது, திடீரென ஒரு அரசு பஸ் வேகமாக வந்தது. அது திருச்செந்தூரில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்ற பஸ் ஆகும்.

பஸ் சக்கரம்
வேகமாக வந்த பஸ், எதிர்பாராத விதமாக காட்வின் டோனி பைக் மீது மோதியது. இதில் டோனி நிலை தடுமாறி பஸ்சுக்கு அடியில் விழுந்துவிட்டார். அடுத்த செகண்டே பஸ்ஸின் பின் சக்கரம் டோனி மீது ஏறி இறங்கியதில், அங்கேயே உடல் நசுங்கி உயிரிழந்தார் டோனி.

டிராபிக் ஜாம்
பரபரப்பு நிறைந்த சாலையில் காலையிலேயே இப்படி ஒரு விபத்து நடந்துவிடவும், பொதுமக்கள் கூடிவிட்டனர். அடுத்த சில நிமிடங்களிலேயே டிராபிக் ஜாம் ஆகிவிட, உடனடியாக விபத்து குறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

கணவன்
கூலம் கூலமாக நசுங்கி கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவிக்கு தகவல் சொன்னார்கள். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கணவனை வழியனுப்பி வைத்த மனைவி, இதைக் கேட்டதும் அங்கேயே கதறி துடித்தார். பின்னர், உறவினர்களுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓடிவந்தார். கணவனின் சடலத்தை கண்டு மனைவி அழுத காட்சி அனைவரையுமே உலுக்கி விட்டது.

கைது
இறுதியில், மனைவி ஆஷா தக்கலை போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் கருணாகரனை கைது செய்தனர். தகவலறிந்து மாவட்ட எஸ்பியும் நேரில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். உடனடியாக ஆஸ்பத்திரி சென்று துடிதுடித்து அழுதுகொண்டிருந்த ஆஷாவுக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் சொன்னார். கல்யாணமாகி 5 மாசமே ஆன நிலையில், இப்படி போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் தக்கலை மக்களின் மனசில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications