யார் அந்த "விஐபி"?.. ஆற்றில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த காமுகன்.. மொத்தம் 16 பேர்.. மிரண்ட நாகை

பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

நாகை: பெண்கள் ஆற்றில் குளிக்கும்போது வீடியோ எடுத்த காமுகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாகை மாவட்டம் முப்பத்தி கோட்டத்தை சேர்ந்தவர் பாரதிராஜா.. 26 வயதாகிறது.. எம்ஏ பட்டதாரி.. அந்த கிராமத்தில் ஒரு ஆறு ஓடிக் கொண்டே இருக்கும்.. அந்த ஆற்றங்கரையோரம்தான் பாரதிராஜாவின் வீடு உள்ளது.

கிராமத்தை சேர்ந்த பெண்கள் முதல் சிறுமிகள் வரை அந்த ஆற்றில்தான் குளிப்பது வழக்கம்.. அப்படி குளிக்க வரும்போது, அவர்களை மறைவாக இருந்து தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார் பாரதிராஜா..

 மிரட்டல்

மிரட்டல்

மேலும் அந்த வீடியோக்களை வைத்து, சம்பந்தப்பட்ட பெண்களிடம் காண்பித்து மிரட்டி பாலியல் டார்ச்சரும் தந்துள்ளார்.. இறுதியில் பணம், நகைகளையும் மிரட்டி பறித்துவிடுவார். இது பல நாட்களாகவே நடந்து வந்துள்ளது. இப்படித்தான், அவரது வீட்டிற்கு அருகில் வசிக்கும், கல்லூரி மாணவியையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார்.. பணத்தையும் அவ்வப்போது மிரட்டி பெற்று வந்துள்ளார்.. ஆனால், பாரதிராஜா பணம் கேட்பதை நிறுத்தவே இல்லை..

 மன உளைச்சல்

மன உளைச்சல்

திடீர் திடீரென பணம் கேட்டுவிடுவதால், கல்லூரியில் படிக்கும் அந்த பெண் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.. தன்னிடம் பணம் இல்லை என்று ஒருகட்டத்தில் பாரதிராஜாவிடம் நேரடியாக சொல்ல ஆரம்பித்தார்.. இதனால் ஆத்திரம் அடைந்த பாரதிராஜா, அவரது ஆபாச படத்தை, கடந்த 9ம் தேதி வாட்ஸ்அப்பில் பரவ விட்டார்... இதை அந்த மாணவியின் குடும்பத்தினர் கண்டு அதிர்ந்துவிட்டனர்..

 புகார்

புகார்

மாணவியின் சகோதரர்கள் திரண்டு சென்று பாரதிராஜாவிடம் இதை பற்றி கேட்டுள்ளனர்.. இது தகராறாக உருவெடுத்துள்ளது.. இறுதியில் திருக்குவளை போலீசுக்கு சென்று மாணவி குடும்பத்தினர் புகார் தந்தனர்.. போலீசாரும் அந்த புகாரின்பேரில் பாரதிராஜாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.. ஆனால், அவர் மீது கேஸ் எதுவும் பதிவு செய்யவில்லை என்று கொந்தளிக்கிறார்கள் கிராம மக்கள்.

சிறுமிகள்

சிறுமிகள்

அதுமட்டுமல்ல, போலீஸில் புகார் என்றதுமே பாரதிராஜா அந்த கிராமத்தில் இருந்து தப்பித்து செல்ல முயன்றாராம்.. ஆனால் மேலப்பிடாகை பகுதியில் கிராம மக்களே அவரை மடக்கி பிடித்துள்ளனர்.. பாரதிராஜாவிடமிருந்து செல்போனையும் வாங்கி சோதனையிட்டுள்ளனர்.. அப்போதுதான் அதில் இருந்த வீடியோக்களை பார்த்து மிரண்டு விட்டனராம்.. கிராமத்தைச் சேர்ந்த கல்யாணமான பெண்கள், சிறுமிகள் என 16-க்கும் மேற்பட்டோரின் வீடியோக்களை பதிவு செய்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது..

செல்போன்

செல்போன்

அந்த கிராமத்தை தவிர, வேறு சில பெண்களின் வீடியோக்களும் இருந்திருக்கிறது. இதை பற்றி கேட்டதற்கு, பணத்திற்காக இவ்வாறு செய்ததாக கிராம மக்களிடமே பாரதிராஜா ஒப்புக் கொண்டாராம்.. அந்த ஆத்திரத்தில்தான் செல்போனை தரையில் அடித்து நொறுக்கி, வாய்க்காலில் தூக்கி போட்டுவிட்டார்களாம் கிராம மக்கள்.. இவ்வளவையும் தாங்கள் போலீசில் சொல்லியும், வழக்கு ஏன் பதியவில்லை என்று தெரியவில்லை என்கிறார்கள்.

 துன்புறுத்தல்

துன்புறுத்தல்

அதே கிராமத்தை சேர்ந்த சில கல்லூரி பெண்களிடம் நட்பாய் பழகி, காலேஜில் கொண்டு போய் விடுவதாக சொல்லி காரில் ஏற்றி செல்வாராம்.. பிறகு கூல்டிரிங்ஸ் சாப்பிட்டு போகலாம் என்று சொல்லி, தான் தங்கும் லாட்ஜுக்கு அழைத்து வந்து, மயக்க மருந்து கலந்து தந்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளாராம்.. இப்படி நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப மானத்துக்கு பயந்து வெளியில் சொல்லாமல் இருந்து வருகிறார்களாம்.

 யார் அந்த புள்ளி

யார் அந்த புள்ளி

இப்படி பாரதிராஜா மீது ஆங்காங்கே புகார்கள் கிளம்பி உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரித்தால்தான், உண்மை தன்மை தெரியவரும் என்கிறார்கள்.. இவரிடம் பல பெண்கள் சிக்கி இருக்கலாம் என்றும், இவருக்கு பின்னணியில் யாராவது விஐபிக்களின் தொடர்புகள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் கொந்தளித்து கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+