Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அவளை கைவிட மாட்டேன்.." தந்தை சீரழித்த காதலிக்கு நள்ளிரவில் தாலி கட்டிய மகன்... ஊர் மக்கள் வாழ்த்து!

தந்தை சீரழித்த காதலியை மணம் முடித்துள்ளார் மகன்

Subscribe to Oneindia Tamil

நாகை: பெற்ற தந்தையே தன் காதலியை நாசம் செய்த பிறகும், தன் காதலில் உறுதியாக இருந்தார் முகேஷ்.. பாதிக்கப்பட்ட பெண்ணை ஊர் மக்கள் ஆசீர்வாதத்துடன் கல்யாணம் செய்தார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ளது செம்போடை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் கருப்பு நித்யானந்தம்... அமமுகவை சேர்ந்தவர்.. வயது 45, காய்கறி கடை வைத்திருக்கிறார். இவரது மகன் முகேஷ் கண்ணன்.. 20 வயதாகிறது.. இவர் ஐடிஐ படித்துள்ளார்.. தன்னுடன் படித்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்..

இருவரும் படித்து முடித்தனர்.. சென்னையில் ஒரு பிரைவேட் கம்பெனியில் ஒன்றாக வேலையும் கிடைத்தது.. ஒரே ஆபீசில் வேலை பார்ப்பதால், ஒன்றாக லீவு எடுத்து கொண்டு ஊருக்கு வந்தார்கள்.

காதல்

காதல்

இவர்கள் காதல் விவகாரம் இரு வீடுகளுக்கும் தெரியவந்தது. பெண்ணின் வீட்டில் வழக்கம்போல் களேபரம் நடந்தது.. வீட்டில் அடைத்து வைத்துவிட்டனர். ஆனால் மகன் காதலுக்கு நித்யானந்தம் எதிர்ப்பு காட்டவில்லை.. காரணம் மகனின் காதலி மீது கருப்பு நித்யானந்தத்துக்கு ஒரு கண் விழுந்தது.. அதனால் நேரடியாக காதலை துண்டிக்காமல், அதற்காக ரகசியமாக பிளான் பண்ணினார்.

கல்யாணம்

கல்யாணம்

சம்பவத்தன்று மகனின் காதலி வீட்டுக்கு நித்யானந்தம் சென்றார்.. பெண்ணை தனியாக சந்தித்து பேசினார்.. "என் மகனுடன் கல்யாணத்தை நான் செய்து வைக்கிறேன்.. என்னுடன் நம்பி இப்போதே கிளம்பி வா" என்று சொன்னார். இதை நம்பி அந்த பெண்ணும், வருங்கால மாமனார் என்று நினைத்து கொண்டு கூடவே சென்றார்.. செம்போடை பகுதியில் நின்றிருந்த ஒரு காரில் பெண்ணை கடத்தினார்.. கார் போய் கொண்டிருந்தபோது, போற வழியிலேயே காரை நிறுத்தி பெண்ணை மிரட்ட ஆரம்பித்தார். தாலியை கட்டி.. பலாத்காரமும் செய்ததாக தெரிகிறது.

கிராமம்

கிராமம்

இதற்கு பிறகு அந்த பெண்ணை அவரிக்காடு கிராமத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் - பவுன்ராஜவள்ளியின் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்... இனி தன்னுடன்தான் வாழ வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டுள்ளார்.. அதேசமயம் மகனிடம் வந்து, "அந்த பெண் இன்னொருத்தனுடன் ஓடிப்போய்விட்டார்" என்று பிளேட்டை மாற்றி சொல்லி உள்ளார்.

புகார்கள்

புகார்கள்

அடைத்து வைக்கப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து சமயம் பார்த்து இளம்பெண் தப்பி பிழைத்து ஓடிவந்து நேராக வேதாரண்யம் மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்ததன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் கருப்பு நித்யானந்தம் பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. நித்யானந்தம், உடந்தையாக இருந்த தம்பதி ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். கருப்பு நித்யானந்தம் பெண்ணை கடத்துவதற்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பலாத்காரம்

பலாத்காரம்

மகனின் காதலியை கடத்தி.. தாலி கட்டி.. பலாத்காரம் செய்த தந்தையின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கட்டினால் அந்த பெண்ணைதான் கல்யாணம் செய்வேன் ஆரம்பத்தில் இருந்தே முகேஷ் உறுதியாக இருந்தார். பெற்ற தந்தையே காதலியை பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து துடித்து போனார்.. மிகுந்த வேதனையில் இருந்தார்.

வாழ்த்து

வாழ்த்து

ஆனாலும் அவர், தனது காதலியை கைவிடவில்லை... உடனடியாக கல்யாணம் செய்ய முடிவு செய்தார். தந்தை கைதான தினமே அந்த பெண்ணை முகேஷ் கரம்பிடித்தார். இரவு நேரத்தில் இந்த திருமணம் நடந்தது.. இவர்களின் திருமணத்துக்கு அந்த ஊரே திரண்டு வந்தது.. கிராமத்தில் உள்ள கோயிலில் நடந்த கல்யாணத்துக்கு கிராம மக்களும், நண்பர்களும் வாழ்த்து சொன்னார்கள். அப்பா ஜெயிலில் இருந்தாலும், தந்தையின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+