மீனவர்கள் கைது: தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காணுங்கள்..பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில், தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
நாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தலையிட்டு தீர்வு காணுமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் போது பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவ்வப்போது அவர்களைக் கைது செய்து விடுகின்றனர்.

16 பேர் சிறைப்பிடிப்பு
புதுக்கோட்டை,நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது மீனவர்களில் 16 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்
இந்த நிலையில் , இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12.03.2023 அன்று இரண்டு விசைப்படகுகளுடன் (பதிவு எண்: IND-TN-08-MM-81 மற்றும் IND-TN-06-MM- 7818) சிறைபிடிக்கப்பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்.

மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக..
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த மூன்றாவது சம்பவமாகும். மீனவர்கள் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் .அடிக்கடி நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன. தனது முந்தைய கடிதங்களில், இந்த விவகாரத்தை வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். வெளியுறவுத் அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

உரிமைகள் பாதுகாக்கப்படுவதை..
நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் உடனடியாக இதில் நீங்கள் தலையிடவேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

விரைவில் விடுவித்திட...
தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளதாகவும், இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications