நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சூறைக்காற்று..பறந்து சென்ற வலைகள்..நாகை மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இலங்கை கடற்படை 4 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வரும் இலங்கை கடற்படை மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நாகையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது சூறைக்காற்று வீசியது.
சூறைக்காற்றால் நாகை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வலைகள் வல்வெட்டித்துறை கடற்பகுதிக்கு சென்றது. வலைகளை எடுப்பதற்காக மீனவர்கள் வல்வெட்டித்துறை கடற்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டியதாக கூறி நான்கு மீனவர்களை சிறைபிடித்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த வாரம் நாகையில் இருந்து 40க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 நாட்களுக்கு முன்பு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடல்பகுதியில் நுழைந்ததாக கூறி 11 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று கைது செய்தது.

Sri Lankan navy arrests 4 Tamil Nadu fishermen seizes their boats

இந்த 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பருத்தித்துறை துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மீனவர்கள் 11 பேரும் கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மாதங்களில் தமிழக மீனவர்கள் பலர் கைது செய்யப்பட்டபோது அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய எல்லையில் பரபர.. உள்ளே புகுந்த இலங்கை படை! 12 மீனவர்கள் கைது - ஆக்‌ஷன் எடுக்குமா மத்திய அரசு? இந்திய எல்லையில் பரபர.. உள்ளே புகுந்த இலங்கை படை! 12 மீனவர்கள் கைது - ஆக்‌ஷன் எடுக்குமா மத்திய அரசு?

English summary
Sri Lankan Navy has arrested 4 fishermen from Tamil Nadu for fishing across the border and investigated. It has also been reported that the Sri Lankan Navy has arrested 4 fishermen and seized the fishermen's boat, which is being investigated by the Sri Lankan Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X