வேதாரண்யம் மீனவர்களை நடுக்கடலில் தாக்கி வழிப்பறி செய்த இலங்கை கடற் கொள்ளையர்கள்.. 5 பேர் படுகாயம்!
நாகப்பட்டினம்: விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் கம்பி, கட்டையால் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். காயமடைந்த மீனவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேதாரண்யம் மீனவர்கள் 11 பேர் படகுகளில் சென்று ஆறுகாட்டுத்துறை கடற்கரையில் இருந்து 22 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது நேற்று இரவு 3 பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தி, கம்பி, கட்டையைப் பயன்படுத்தி கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல் நடத்தி அவர்களிடம் இருந்து 800 கிலோ மீன்பிடி வலை, திசை காட்டும் கருவி, செல்போன் உள்ளிட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்துச் சென்றுள்ளனர். பொருட்களை பறித்துக்கொண்டு தமிழக மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர்.
இதில் மீனவர் பாஸ்கரை தலையில் கம்பியால் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அருள்ராஜ் என்ற மீனவரை கத்தியால் வெட்டியதில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதலில் படுகாயமடைந்த மீனவர்கள் ஆற்காட்டுத்துறை கடற்கரைக்கு வந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அருள்ராஜ், பாஸ்கர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தலையில் பலத்த காயமடைந்த பாஸ்கருக்கு 21 தையல் போடப்பட்டுள்ளது. மேலும் செந்தில் அரசன், மருது, வினோத் ஆகிய மூன்று பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications