சசிகலாவை சாக்கடை என விமர்சித்த குருமூர்த்தி.... அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதில் கூற மறுப்பு
நாகப்பட்டினம்: சசிகலாவை கடுமையாக விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தொடர்பான கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ். மணியன் பதிலளிக்க மறுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
நாகப்பட்டினத்தில் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதிமுக கொடியை ஏற்றி, எம்ஜிஆரின் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.எஸ். மணியன். அப்போது, மழையால் பாதித்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக தமிழக அரசு சார்பாக கடந்த 7-ந் தேதி முதல் 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது என்றார்.
மேலும், தற்போது மழை பாதிப்பு கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் நல்லது நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் ஓஎஸ்.மணியன் கூறினார்.
தொடர்ந்து சசிகலாவை சாக்கடையோடு ஒப்பிட்டு குருமூர்த்தி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஓஎஸ்.மணியன் பதில் கூற மறுப்பு தெரிவித்து, சில வினாடிகள் மெளனமாக இருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications