பாஜகவினரின் அட்டூழியம்.. முருகன் மாநாட்டுக்கு பணம் கேட்டு ஒப்பந்ததாரருக்கு மிரட்டல் - 2 பேர் கைது
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினத்தில் ஒளவையார் மணிமண்டபம் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்ததாரரிடம் முருகன் மாநாட்டுக்குப் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் பாஜக நிர்வாகிகள் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ளது துளசியாப்பட்டினம். இங்கு தமிழக அரசு சார்பில் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் தமிழ்ப் புலவர் ஒளவையாருக்கு மணிமண்டபம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன கட்டுமானப் பணிகளுக்காக வளாகத்துக்குள் பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. அந்தப் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணை கட்டுமானப் பணிக்கு பயன்படுத்துவதாக பாஜகவினர் புகார் தெரிவித்திருந்தனர்.

புகாரோடு மட்டுமல்லாமல், சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து, வேதாரண்டயம் வட்டாட்சியர் வடிவழகன் மணிமண்டபம் கட்டப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். வளாகத்தில் தோண்டப்பட்டிருந்த பள்ளம், அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மண்ணினுடைய அளவை நில அளவையரைக் கொண்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, ஒப்பந்ததராரிமும் வட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டார். கட்டுமானப் பணிக்கான திட்ட அறிக்கையின்படி வளாகத்தில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. அதில் இருந்து எடுக்கப்பட்ட மண் அருகிலேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. பணி முடிந்த பின்னர் தூர்வைக்காக அந்த மண் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று ஒப்பந்தரரார் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் முன்பே முருகன் மாநாட்டுக்கு 5 லட்சம் ரூபாய் கேட்டு பாஜகவினர் மிரட்டினர். அந்தப் பணத்தை கொடுக்காததால் பள்ளம் தோண்டிய மண்ணை வைத்து கட்டுமானத்துக்குப் பயன்படுத்துவதாக பொ் புகார் அளிக்கின்றனர் என்று ஒப்பந்ததரார் கூறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் விசாரணை நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக வாய்மேடு காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், பாஜக நிர்வாகிகளான கரு நாகராஜன், இளங்கோவன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications