"நானும் உங்களை போல ஐஏஎஸ் தான்.." நாகை கலெக்டரை தெறிக்கவிட்ட நாளைய கலெக்டர்! சிறுவனின் கலக்கல் வீடியோ
நாகை: நாகையில் நடைபெற்ற பெண்கள் தின நிகழ்ச்சியில் நாகை கலெக்டரிடம் தனது மழலை மொழியில் சிறுவன் ஒருவன் பேசும் வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
Recommended Video
உலக மகளிர் தின விழா இன்று (மார்ச் 8) கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் பெண்கள் தினம் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்கள் தினத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் தின போட்டிகள்
அதன்படி நேற்றைய தினம், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாகை ஆயுதப்படை மைதானத்தில் மகளிர் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.இந்த விளையாட்டுப் போட்டிகளை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சிறந்த ஏராளமான பெண்கள் இங்கு நடத்தப்பட்ட வாலிபால் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நானும் ஐ..ஏ.எஸ் தான்
அப்போது போட்டிகள் தொடங்கும் முன்பு, வரிசையாக நின்று இருந்த போட்டியாளர்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வாழ்த்து தெரிவித்து வந்தார். அப்போது தனது தாயுடன் அங்கு நின்று கொண்டிருந்த சிறுவன் கவின்மாறன் கலெக்டரை பார்த்து, வணக்கம் கூறி, நானும் ஐ..ஏ.எஸ் அதிகாரிதான் என்று கூறி மாவட்ட ஆட்சியரைத் தெறிக்க விட்டான்.

தெறிக்கவிட்ட சிறுவன்
இதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த ஆட்சியர், "யாருப்பா நீ" என விளையாட்டாகக் கேட்டார். அதற்கு அச்சிறுவன் தனது மழலை குரலில், "நான் கவின்மாறன் IAS" என்று தெரிவித்தார். இதைக் கேட்டதும் மேலும் உற்சாகமடைந்த ஆட்சியர், "ஏன் நீ ஐஏஎஸ் ஆக வேண்டும்" என்று ஆர்வமாகக் கேட்டார். அதற்கு அச்சிறுவன், "நீங்கள் ஐஏஎஸ் அதிகாரி தானே. உங்களைப் போல நானும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான்" என்று சூப்பராக பதில் அளித்தான்.

டிரெண்டிங்
இதனால் அந்த இடமே கலகலப்பானது. இதைக் கண்டு உற்சாகமடைந்த அங்கிருந்த போட்டியாளர்கள், கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சிறுவன் கவின்மாறன் குறித்து அவரது தாயாரிடம் கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டறிந்தார். பலர் சுற்றி இருந்தும் கூட துளியும் அச்சமின்றி, சிறுவன் கவின்மாறன் ஆட்சியரிடம் பேசும் இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications