நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வனவிலங்குகளையும் விட்டு வைக்காத குடிநீர் பஞ்சம்.. கோடியக்கரை சரணாலயத்தில் பரிதாபம்

Google Oneindia Tamil News

நாகை: வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வனவிலங்குகள் தண்ணீருக்காக ஏங்கி அலையும் அவல நிலை உள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 2,300 ஹெக்டேர் பரப்பளவில் பசுமை மாறாக்காடு அமைந்துள்ளது. இங்க அமைந்துள்ள வனவிலங்கு சரணாலயத்தில் புள்ளிமான், வெளிமான், நரி, குரங்கு, குதிரை, உடும்பு, மயில், காட்டுப்பன்றி, உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

Water famine in the kodiyakarai sanctuary..Forest animals suffer

வனவிலங்கு சரணாலயத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிமான புள்ளிமான்கள் ம, 150 குதிரைகள், ஆயிரக்கணக்கிலான குரங்குகள், 100 நரிகளும், 500 காட்டுப்பன்றிகள் , 100க்கும் மேற்பட்ட முயல் மற்றும் உடும்புகளும், பழந்தின்னி வவ்வால்கள் உள்ளன.

மாநிலம் முழுவதுமே பரவலாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த சரயாலயத்தில் வசிக்கும் வனவிலங்குகளுக்கும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. டேங்கர் லாரி மூலம் நாள்தோறும் வனவிலங்குகளுக்கு குடிநீர் விநியோகம் செய்தாலும் தண்ணீர் பற்றாக்குறையால் வனவிலங்குகள் காட்டை விட்டு வெளியேறுகின்றன.

தூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்! நெட்டிசன்ஸ் அஞ்சலி! தூத்துக்குடி படுகொலை.. தமிழகத்தின் ஜாலியன் வாலாபாக்! நெட்டிசன்ஸ் அஞ்சலி!

வழக்கமாக சரணாலயம் அமைந்துள்ள காட்டு பகுதியில் வடகிழக்கு பருவமழை சராசரியாக 120 செ.மீ மழை பெய்யும். ஆனால் சென்ற ஆண்டு மிகக் குறைந்த அளவே மழை பெய்தது எனவே குளங்கள் வறண்டு விட்டன.

இதனால் வனப்பகுதியிலுள்ள சுமார் 58 குளங்களும் தண்ணீரின்றி காணப்படுகிறது. டேங்கர் லாரி மூலம் வனத்துறை தண்ணீர் ஊற்றினாலும் வனவிலங்குகளுக்கு அது போதுமானதாக இல்லை. மழை பெய்தால்தான் வறட்சி நீங்கி சரணாலயத்தில் வனவிலங்குகள் உற்சாகமடையும்.

English summary
Kodiyakkarai Wildlife Sanctuary in Vedaranyam Taluk has a severe water shortage that causes the wildlife to crawl out of the water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X