வேளாங்கண்ணியில் சிக்கிய பல கோடி மதிப்புள்ள பொருள்.. கடலில் மட்டுமே கிடைக்கும் மிதக்கும் தங்கம்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கில உமிழ்நீர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வன அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று சோதனை நடத்தினார்கள். சுமார் ரூ.9 கோடி மதிப்புள்ள திமிங்கில உமிழ்நீரை பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடல் தங்கம் என்றும் மிதக்கும் தங்கம் என்றும் அழைக்கப்படும் பொருள் என்றால், திமிங்கில உமிழ்நீர் கட்டி தான். இதன் மதிப்பு பல கோடியாகும். கடல் பகுதிகளில் வாழும் எண்ணெய்த் திமிங்கிலங்கள் வெளியேற்றும் இந்த உமிழ்நீர் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம்.

இந்த திமிங்கில உமிழ்நீர் கட்டி என்பது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். இந்த எண்ணெய்த் திமிங்கிலங்கள் கடலில் வாழும் பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம் ஆகும். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க இயலாது.
அதனால் அந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக் கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிவிடும். இதுதான் திமிங்கல வாந்தி என்று அழைக்கப்படுகிறது. அதாவது ஆங்கிலத்தில் அம்பர் கிரீஸ் என்று அழைக்கப்படுகிறது.
திமிங்கிலத்தின் வாந்தியான திமிங்கில உமிழ்நீர் கட்டி உலகம் முழுவதும் நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கில வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு ஏற்றார் போல் அதிக விலை தரப்படுகிறது. கோடிகளில் இதன் மதிப்பு உள்ளது.
சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்கவும், அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்கவும் பயன்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. திமிங்கில வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
அதேநேரம் திமிங்கில வாந்தியான அம்பெர்கிரிஸ் கிடைப்பது மிகவும் அபூர்வமாகும் வளைகுடா நாடுகளில் திமிங்கில வாந்தி எனும் அம்பகிரிசுக்கு பெரும் தேவை இருப்பதால் அதனை கோடிகளை கொட்டி வாங்க பலர் ஆர்வமாக உள்ளனர். இதனால் தான் இதனை 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கிறார்கள்.. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு தரத்தினை பொறுத்து 1.5 கோடி ரூபாய் வரை போகிறது. இதன் காரணமாக எண்ணெய்த் திமிங்கிலங்கள் வேட்டையாடப்படுகிறது. திமிங்கலத்தை கொல்வதன் மூலமாக அதன் உமிழ்நீர் சேகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் அதன் உமிழ் நீர் கடலில் மிதக்கிறது/ இந்தியாவில் திமிங்கில வாந்தியை கடத்தி விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். திமிங்கில வாந்தியை சட்டவிரோதமாக விற்றால் கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. அந்த வகையில் அண்மையில் கன்னியாகுமரி, திருப்பூரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் திமிங்கில உமிழ்நீர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வன அதிகாரிகளுக்கு அண்மையில் ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் நேற்று வன அதிகாரிகள் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விற்பனைக்காக திமிங்கில உமிழ்நீர் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியானது.
இதனைத்தொடர்ந்து திமிங்கில உமிழ்நீரை வன அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக நாகை நம்பியார் நகரை சேர்ந்த வீரமணி(வயது 43), கார்த்திகேயன்(37), புதுச்சேரியை சேர்ந்த பெலிக்ஸ் பவுல்ராஜ்(50), தஞ்சையை சேர்ந்த தமிழரசன்(42) முத்துப்பேட்டையை சேர்ந்த கண்ணன்(59) ஆகிய 5 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 9 கிலோ எடை உள்ள திமிங்கல உமிழ் நீர் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.பறிமுதல் செய்யப்பட்டுள்ள திமிங்கில உமிழ்நீர் தரமானதா? என்பதை அறிய ஆய்வுக்கு அனுப்பி உள்ளார்கள்.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications