• search
நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிட்நைட்டில் பறந்த சொகுசு கார்.. திடீர்னு வந்த சத்தம்.. விரட்டி போய் பார்த்தால்.. "குபீர்" அதிர்ச்சி

Google Oneindia Tamil News

நாகை: வாகன போக்குவரத்தில், மின்னல் வேகத்தில் பறந்து சென்ற சொகுசு காரை போலீசார் தடுத்து நிறுத்தி 2 பேரை கைது செய்துள்ளனர்.. என்ன காரணம்?

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் மீன்பிடித்தல் மற்றும் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பலர் ஆடு வளர்ப்பு மற்றும் கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.. மீன்பிடி தடை காலம், மற்றும் மழை, புயல் சமயங்களில், இவர்களுக்கு பெருமளவு கைகொடுத்து உதவுவது ஆடு கோழி வளர்ப்புதான்..

ஆட்டுக்குட்டிகள்

ஆட்டுக்குட்டிகள்

அதனால்தான், நாகை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் ஆடுகள் திருட்டு அதிகமாக நடந்து வருகிறது.. கடந்த சில வாரங்களுக்கு முன்புகூட, பிரதாபராமபுரம் கவுண்டர்புரம் பகுதியில், இரவு நேரங்களில் நிறைய ஆடுகள் திருட்டு போவதாக புகார்கள் எழுந்தபடியே இருந்தன. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், பல ஆயிரம் மதிப்புள்ள ஆடுகள் காணாமல் போனதால் அந்த பகுதி மக்கள் அதிர்ந்து போனார்கள்.. போலீசிலும் புகார் தந்தார்கள்.. ஆனாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

 சரக்கு மிடுக்கு

சரக்கு மிடுக்கு

அதனால், அந்த கிராமத்து இளைஞர்களே ஆடு திருடர்களை பிடிக்க நேரடியாக களமிறங்கினார்கள்.. கடைசியில் பார்த்தால், அத்தனை ஆடுகளையும் தினமும் ஆட்டைய போட்டது ராஜ்சின்னத்தம்பி என்ற ஒரே ஒரு நபர் என தெரியவந்தது.. தினமும் ஆடுகளை திருடி, நகர்ப்பகுதிகளில் விற்று, அந்த காசில் தண்ணி அடிப்பாராம். பிறகு அவரை போலீசில் ஒப்படைத்தார்கள். அதேபோல, அதிமுக பிரமுகர் ஒருவரே ஆட்டை ஆட்டைய போட்டது பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. இத்தனைக்கும் அந்த ஊராட்சியில் 2 முறை ஊராட்சி மன்ற தலைவராக இவர் பதவி வகித்துள்ளார்..

 ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி

அவர் பெயர் கவிமுருகன். ஒரு விவசாயியின் 2 ஆடுகளைத் திருடி, தன் வீட்டில் நண்பர்களுக்கு கறி விருந்து வைத்திருக்கிறார்.. கடைசியில் போலீசார் தலையிட்டு, அந்த விவசாயிக்கு நஷ்ட ஈடு பெற்று தந்தனர்.. நேற்றுகூட ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வேதாரண்யம் பகுதியில் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.. அதிர்ச்சி அடைந்த பொதுமக்களும், போலீசில் புகார் சொன்னார்கள்.. இதனால் போலீசாரும், ஆடு திருட்டு கும்பலை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்தனர்..

 9 ஆடுகள்

9 ஆடுகள்

நேற்றிரவு தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு கார் போலீசாரை பார்த்ததுமே வேகமாக பறக்க முயன்றது.. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் வாய் கட்டப்பட்ட நிலையில் 9 ஆடுகள் காருக்குள்ளே இருந்தன.. இதையடுத்து காரில் சென்ற சென்னையை சேர்ந்த 2 பேர் மற்றும் காருடன் 9 ஆடுகளை வேதாரண்யம் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

 மிஸ்ஸிங்

மிஸ்ஸிங்

இதைதொடர்ந்து 2 பேரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெயர் காசிம், மோத்திபாபு என்பதும், சென்னை திருவான்மியூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.. வேதாரண்யம் பகுதியில் ஆடுகளை திருடி, சென்னையில் விற்பதுதான் இவர்களுக்கு வழக்கமாம்.. அதற்காகவே காரையும் கொண்டு வந்துள்ளனர்.. இவர்களுடன் மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதால் போலீசார் அவர்களை தேடி கொண்டிருக்கிறார்கள்.

English summary
Why did Nagai Police arrested two young man and what happened to the Goat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X