"காதலிக்க தகுதியானவள் நான் இல்லை".. உருக்கமாக பேசி தற்கொலை வீடியோவை காதலனுக்கு அனுப்பிய காதலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே காதலிக்க தகுதியானவள் நான் இல்லை என உருக்கமாக பேசி தூக்கிட்டு தற்கொலை வீடியோவையும் காதலனுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Recommended Video

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் அந்தோணி. இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நிபியா (21) என்ற மகளும், எக்ஸெல் என்ற மகனும் உள்ளனர்.
நிபியா ஏர்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சிங் பயிற்சி மாணவியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நிபியாவிற்கு பல ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டது. பல பேருடன் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது.

தகராறு
சமீபத்தில் தக்கலை அருகே உள்ள வேர்கிளம்பி பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஜோ என்பவருடன் நட்பு ஏற்பட்டு நட்பு காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இதற்கிடையே நிபியா தனது ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பழகியதால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தூக்கிட்டு தற்கொலை
இந்த நிலையில் நேற்றுமுன் தினம் நிபியா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது காதலனுக்கு உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ்ஆப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உடற்கூறு
இது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் நிபியா உடலை மீட்டு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

திருத்திக் கொள்ள முடியவில்லை
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் நிபியா கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது அதில் , என்னைப் பற்றி தெரிந்தும் என்னை காதலித்தாய். ஆனால் என்னால் மாற முடியவில்லை. நான் செய்த தவறுகளை திருத்தி கொள்ள முடியவில்லை.

தகுதியானவள்
உன்னை காதலிக்க நான் தகுதியானவள் இல்லை என்றும் என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அதில் எழுதி வைத்துள்ளார். இதனை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications