தேசிய அரசியலை பிரதிபலிக்கும் கன்னியாகுமரி! ஜனநாயக கடமையாற்றிய நடிகரும், எம்பியுமான விஜய் வசந்த்!
நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக மீண்டும் களமிறங்கியிருக்கும் சிட்டிங் எம்பியும், நடிகருமான விஜய் வசந்த், இன்று வாக்களித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே, நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பிரசாரங்கள் நிறைவடைந்தன. மொத்தமுள்ள 543 லோக்சபா தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகம் + புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதிகளின் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதியும் ஒன்று. தேசிய அரசியலை நேரடியாக பிரதிபலிக்கும் தொகுதியாக இது இருக்கிறது. இங்கு காங்கிரஸ் vs பாஜக vs அதிமுக vs நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.
இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் சார்பில் மறைந்த முன்னாள் எம்பி வசந்த் குமாரின் மகன் விஜய் வசந்த்தும், பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், அதிமுக சார்பில் பசிலியான் நசரேத், நாம் தமிழர் சார்பில் மரியா ஜெனிஃபர் போட்டியிடுகிறார்கள்.
இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று 1952 தொடங்கி 2004 வரை நடைபெற்ற தேர்தல்கள். இரண்டாவது 2009 தொடங்கி 2021 வரை நடைபெற்ற தேர்தல்கள். அதாவது, 1952-2004 வரை நடைபெற்ற 15 லோக்சபா தேர்தல்கள் நாகர்கோவில் தொகுதி என்கிற பெயரில் நடைபெற்றிருக்கிறது. இதில் 8 தேர்தல்களில் காங்கிரஸ்தான் வென்றிருக்கிறது. மூன்று தேர்தல்களில் பாஜகவும், ஒரே ஒரு முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றிருக்கிறது.
அதன் பின்னர் 2009-2021 வரை கன்னியாகுமரி தொகுதி என பெயரில் லோக்சபா தேர்தல்கள் நடந்திருக்கின்றன. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் பெற்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2.4 லட்சம் வாக்குகளையும், திமுக வேட்பாளர் 1.1 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். இதனையடுத்த 2019ம் ஆண்டு தேர்தலில் எச்.வசந்தகுமார் 6.2 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். ஆனால் 2021ம் ஆண்டு அவர் மறைந்ததையடுத்தையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். எனவே எம்எல்ஏ போனாலும் கட்சிக்கு செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், விஜயதாரணியின் விலகலை முன்னிலைப்படுத்தி இந்த முறை எப்படியாவது தொகுதியை வென்று விட வேண்டும் என்று பாஜக பிளான் போட்டுள்ளது. இப்படியாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தொகுதியின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஒட்டி இருப்பதால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தாக்கம் இங்கு வலுவாக இருக்கிறது. அதேநேரம், 1982ல் உருவான மண்டைக்காடு கலவரம் இந்துத்துவா சக்திகளை வேரூன்றி வளர செய்திருக்கிறது. இது அப்படியே பாஜகvsகாங்கிரஸ் என்கிற சூழலாக அரசியலில் பிரதிபலிக்கிறது.
இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார். 11 மணி நிலவரப்படி கன்னியாகுமரி தொகுதியில் 61882 (20.92%) வாக்குகள் பதிவாகியுள்ளன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications