நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொகுதிக்கு 50 கோடி.. பதுக்கி வச்சு காத்திட்டிருக்கு அதிமுகவும், பாஜகவும்.. அழகிரி பகீர் தகவல்

Google Oneindia Tamil News

Recommended Video

    பணம் பதுக்கி வச்சு காத்திட்டிருக்கு அதிமுகவும், பாஜகவும் - அழகிரி

    நாகர்கோவில்: மோடியின் பிரச்சார வியூகம் தயாராகாததால் தான் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஐம்பது கோடி என பாஜகவும் அதிமுகவும் ஒதுக்கி பதுக்கி வைத்துள்ளது என நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    காங்கிரஸ் திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரச்சார தொடக்க விழா பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிருஸ்தவ கல்லூரி மைதானத்தில் வைத்து நாளை நடைபெற உள்ளது.

    இதில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய இன்று நாகர்கோவில் வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

    பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க.. கோர்ட்டுக்கு நடிகை அதுல்யா ரவி வேண்டுகோள் பெரிய தண்டனை தராம இவங்கள விட்டுடாதீங்க.. கோர்ட்டுக்கு நடிகை அதுல்யா ரவி வேண்டுகோள்

    ராகுல் காந்தி வருகை

    ராகுல் காந்தி வருகை

    அப்போது அவர் கூறியதாவது .. நாளை நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி, முக ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணியை சேர்ந்த அனைத்து தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். விவசாயம், வேலையில்லா திண்டாட்டம், சிறு குரு தொழில்கள் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து தங்களது தேர்தல் பிரச்சாரம் இருக்கும்.

    இது பேரம் பேசாத கூட்டணி

    இது பேரம் பேசாத கூட்டணி

    இந்திய இறையாண்மையை பாதுகாக்கும் கூட்டணியாகவும், பேரம் பேசாத கூட்டணியாகவும் தங்கள் கூட்டணி உள்ளது. ஜனநாயக இந்தியாவை

    ஆர்.எஸ்.எஸ் பாஜக கைப்பற்றி நாட்டை சீரழித்து விட்டது. ரிசர்வ் வங்கி சி.பி.ஐ நீதிமன்றம் போன்ற அணைத்திலும் தலையீட்டை செலுத்திய பாஜக தேர்தல் ஆணையத்திலும் தலையிட்டது. மோடியின் பிரச்சார வியூகம் தயாராகாததால் தான் தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் காலம் தாழ்த்தியது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    பண விநியோகம்

    பண விநியோகம்

    தமிழகத்தில் தேர்தளுக்காக வீதி வீதியாக வீடு வீடாக பணம் கொடுக்கும் நிலை அதிகரித்து உள்ளது. ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஐம்பது கோடி என பாஜகவும் அதிமுகவும் ஒதுக்கி பதுக்கி வைத்துள்ளது. இதனால் ஏழை மற்றும் சிறிய கட்சிகள் பாதிப்படைகின்றன. பணபலத்தால் தேர்தல் நடத்தப்படுவதால் தேர்தல் ஆணையம் தான் தோல்வி அடைந்து உள்ளது.

    மதுரை சித்திரைத் திருவிழா

    மதுரை சித்திரைத் திருவிழா

    இந்தியா பாகிஸ்தான் சண்டையை விட எல்லை பிரச்சனையை விட தமிழகத்தில் நியாயமான தேர்தல் நடத்துவது பெரிய விஷயம். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அந்த மாவட்டத்தில் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கலாம். கடவுளை வணங்குவதற்கே பொதுமக்கள் முக்கியத்துவம் அளிப்பார்கள் வாக்களிக்க வர மாட்டார்கள்.

    விதிகளின் படி தண்டனை

    விதிகளின் படி தண்டனை

    தமிழகத்தில் தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது உலகறிந்த விஷயம். மதசார்பற்ற அரசு மத்தியில் அமைய வேண்டும் என்பதில் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் உறுதியாக உள்ளது. எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் விதிகளின் படிதான் தண்டனை கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

    English summary
    TNCC president KS Alagiri has said that ADMK and BJP are planning to spend Rs 50 crore per seat in the LS polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X