டாஸ்மாக் பாரை திறக்கிறாங்க.. ஆனா ராமேஸ்வர தீர்த்த கிணறை திறக்க மறுக்குறாங்க.. பாஜக அண்ணாமலை
நாகர்கோவில்: டாஸ்மார் பாரை நாளை முதல் திறக்கிறார்கள். ஆனால் ராமேஸ்வர தீர்த்த கிணற்றை திறக்க மறுக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் கே அண்ணாமலை விமர்சித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இ.எஸ்.ஐ மருத்துவமனை வேண்டும். மத்திய அரசு 106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ள நிலையில் மாநில அரசு 5 ஏக்கர் இடம் ஒத்துக்காததால் மருத்துவமனை அமையவில்லை, மாநில அரசு உடனடியாக நிலம் ஒதுக்க வேண்டும்.
நாளை டாஸ்மாக் பார் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது, ஆனால் ராமேஸ்வரம் கோவிலில் உள்ள 21 தீர்த்த கிணறு திறக்க கூடாது என அரசு கூறுகிறது. தீர்த்த கிணறு நம்பி 600 குடும்பங்கள் வாழ்ந்து வரும் நிலையில், பாரை திறக்க கங்கணம் கட்டி வேலை செய்யும் தமிழக அரசு ஏன் ராமேஸ்வரம் கோவில் தீர்த்த கிணறை திறக்க கூடாது என கூறுகிறது.

தடுப்பூசி
நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும், தடுப்பூசி முழுமையாக போடாத நிலையில் குழந்தைகள் பேருந்துகளில் செல்வது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசு பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் புதிய நடைமுறை
மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஐ எல்லா மாநிலங்களும் கொண்டாடும் நிலையில் தமிழகத்தில் மட்டும் புதிதாக ஜூலை 18 தமிழ்நாடு நாள் என அறிவிக்க வேண்டியதன் அவசியம் என்ன, இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் செயல். கடந்த வருடம் கொடுக்கப்பட்ட 7.5 சதவிகித ஒதுக்கீடு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது.

பொன் ராதாகிருஷ்ணன்
இப்போது உள்ள மாநில அரசு கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய செயல். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 150 மாணவர் சேர்க்கையை தமிழக அரசு வேண்டாம் என கூறுகிறது, எய்ம்ஸ் ஐ வைத்து அரசியல் செய்யக்கூடாது, மத்திய அரசு கொடுத்தாலும் அதனை மாநில அரசு வேண்டாம் என கூறுவது ஏன்?

பட்டாசு வெடிப்பது
இந்தியாவில் 2000 வருடங்கள் பாரம்பரிய பண்டிகையில் பட்டாசு வெடிப்பதை தடை செய்ய கூடாது, 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க அனைவரும் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டும். தமிழகத்தில் திமுக அரசு கங்கணம் கட்டிக்கொண்டு பாஜக தலைவர்களை கைது செய்கிறது, பாஜக நிர்வாகிகள் மற்றும் பெண்களை திமுக நிர்வாகிகளை தரகுறைவாக பேசி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை, இது குறித்து திமுகவினரால் பாதிக்கப்பட்ட பாஜக பெண் நிர்வாகிகள் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.
-
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications