கன்னியாகுமரியை ரவுண்டப் செய்யும் பாஜக.. அதிமுகவுக்கு நெருக்கடி! புலம்பும் ரரக்கள்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை, பாஜக கொஞ்சம் பலமாகவே இருக்கிறது. இந்த பலத்தை மேலும் அதிகரிக்க இந்த முறை அதிமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டு நெருக்கி வருகிறது. இதனால் அதிமுக தலைவர்கள் டென்ஷன் ஆகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் என்பது மற்ற மாவட்டங்களை விட வித்தியாசமான அரசியல் களத்தை கொண்டிருக்கிறது. இங்கு காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தற்போது செல்வாக்கு அதிகமாக இருக்கிறது.

இதுவரை இந்த மாவட்டங்களில் அதிகமுறை ஜெயித்திருப்பது காங்கிரஸ்தான். குறிப்பாக மேற்கு பகுதிகளான விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் குளச்சல் பகுதியில் இக்கட்சிக்கு செல்வாக்கு அதிகம். ஆனால், இங்குகிருந்துதான் பாஜக தனது அரசியல் கணக்கை தொடங்கியது. முதல் முறையாக 1996ல்தான் பாஜக பத்மநாபபுரம் தொகுதியல் வெற்றி பெற்றது. ஆனால், இந்து அமைப்புகளின் உதவி மற்றும் மண்டைக்காடு கலவர் ஆகியவை அக்கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தது.
இன்று வரை இந்து அமைப்புகள் இம்மாவட்டத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. எந்த அளவுக்கு எனில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டத்தில் பாரத் மாதாகி ஜெய் என்றும், வீர சாவார்க்கருக்கு ஜெய் என்றும் முழக்கம் எழுப்பும் அளவுக்கு ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும் வளர்ந்திருக்கிறது. இப்படி இருக்கையில், வரும் சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கூடுதல் தொகுதிகள் கேட்டு பாஜக அடம்பிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த தேர்தலில் 3 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ஆனால், இந்தமுறை 4 தொகுதிகளை கேட்டு கட்சி அடம்பிடிக்கிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருப்பதால், இந்த முறை 4 தொகுதிகளில் களம்காண திட்டமிட்டிருக்கிறது. நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் மற்றும் விளவங்கோடு ஆகிய 4 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டிருக்கிறது. இதனால் அதிமுக தலைமை டென்ஷனாகியிருக்கிறது.
ஏற்கெனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் பறிபோயிருக்கிறது. மத்திய அரசை வைத்து அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால் நம்முடைய வாங்கியை பாஜக காலி செய்துவிடும் போல இருக்கிறதே என கன்னியாகுமரி நிலவரத்தை பார்த்து திமுக தலைவர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications