திக் திக்.. நெல்லை டூ கன்னியாகுமரி.. மெல்ல நகரும் அரிகொம்பன் யானை! வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
நாகர்கோவில்: இடுக்கி, தேனி என தமிழ்நாடு, கேரளாவை ஒரு கலக்கு கலக்கி வந்த அரிகொம்பன் யானையானது ஒரு வழியாக பிடிக்கப்பட்டு நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இந்த யானை கன்னியாகுமரி நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால் வனத்துறையினர் உஷாரடைந்துள்ளனர்.
காட்டு யானைகள் எப்போதும் ஆபத்தானவை. அதுவும் தனியாக சுற்றும் ஒற்றை யானை நிச்சயம் மூர்க்கமாக இருக்கும். அப்படிப்பட்ட யானைதான் அரிகொம்பன் எனப்படும் அரிசி கொம்பன் யானை. இது அரிசியை விரும்பி சாப்பிடுவதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. அரிசிக்காக மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து அங்குள்ள கட்டிடங்களை சேதம் செய்து குறுக்கே வருபவர்களை கொன்றுவிட்டு அரிசியை சாப்பிட்டுவிட்டு செல்லும்.

இந்த அளவுக்கு அட்டகாசம் செய்த இந்த யானையை பிடிக்க 5 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர் அந்த யானையின் கழுத்தில் சாட்டிலைட் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விடப்பட்டது. பொதுவாக யானைகள் கூட்டமாக வாழ்பவைதான். இந்த கூட்டத்திற்கு ஒரு வயதான பெண் யானைதான் தலைவனாக இருக்கும். இந்த பெண் யானையின் உத்தரவை மீறும் யானைகள் கூட்டத்தைவிட்டு விலக்கி வைக்கப்படும்.
அப்படி தனியே சுற்றும் யானைகள் எப்போதும் மூர்க்கமாகவே இருக்கும். அரிகொம்பனும் இப்படி தனியாக வந்த யானைதான். இது காட்டை விட்டு மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து அங்கு கிடைக்கும் அரிசியை உண்டு பழகிவிட்டது. எனவே அடிக்கடி மக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து தொந்தரவு செய்துக்கொண்டிருந்தது. இதனையடுத்து வனத்துறையினர் யானையை இரண்டு மூன்று முறை மயக்க ஊசி செலுத்தி பிடித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட்டுவிட்டு வருகின்றனர்.
ஆனாலும், இது மீண்டும் மீண்டும் மக்கள் நடமாடும் பகுதிக்கு வருகிறது. இதனை தடுக்க யார் வந்தாலும் மரணம்தான். இப்படி 20 பேரை இந்த யானை கொன்றிருக்கிறது. இந்நிலையில் வழக்கம் போல வனப்பகுதியிலிருந்த யானை இடுக்கி வழியாக தேனி மாவட்டத்திற்குள் இறங்கியது. இதனால் கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என்றும் கெட்டுக்கொள்ளப்பட்டனர்.
மறுபுறம் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் ஓசூரிலிருந்து வரவழைக்கப்பட்டு அதில் யானை ஏற்றப்பட்டு நெல்லை களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் விடப்பட்டது. இந்நிலையில் இந்த யானை கன்னியாகுமரி நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால் வனத்துறையினர் உஷாரடைந்துள்ளனர்.
யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கட்டப்பட்டுள்ளதால் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நெல்லையில் கோதையாறு அணை அருகே முத்துக்குழி பகுதியில் யானை சில நாட்கள் முகாமிட்டிருந்தது. இந்நிலையில், இது தற்போது கன்னியாகுமரி நோக்கி நகர்ந்து வருவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர். ஏற்கெனவே 20 பேரை பலி வாங்கிய இந்த யானையால் குமரியிலும் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என வனத்துறையினர் உஷார் நிலையில் இருக்கின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications