பாரத் மாதா கி ஜெய் .. நாயைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சு.. நாகர்கோவிலில் ஒரு அக்கப் போர்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    நாயைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சு.. நாகர்கோவிலில் ஒரு அக்கப் போர்-வீடியோ

    நாகர்கோவில்: காதலர் தினத்தை எதிர்த்து நூதனமாக போராட்டம் நடத்திய இந்து மகா சபையைச் சேர்ந்தரக்ள் நாய்களுக்குத் திருமணம் செய்து வைத்து களேபரப்படுத்தினர்.

    காதலர் தினம் உலகம் முழுவதும் இன்று கொடாடபட்டு வரும் நிலையில் இந்தியாவில் காதலர் தினத்திற்கு ஆதரவும் அதற்கு சரி சமமாக எதிர்ப்பும் இருந்து வருகிறது.

    hms marry two dogs in kanyakumari

    குறிப்பாக இது வெளிநாட்டு கலாச்சாரம் என்றும் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி காதலர் தினத்திற்க்கு இந்து இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    அதன் படி குமரிமாவட்டத்திலும் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு இருக்கும் நிலையில் சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் போலிசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    hms marry two dogs in kanyakumari

    இந்நிலையில் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் நாகர்கோவிலில் 2 நாய்களுக்கு திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு தங்களுடைய எதிர்ப்பை நூதன முறையில் வெளிப்படுத்தினர்.

    காதலர் தினத்திற்கு இந்து இயக்கங்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள முக்கிய பூங்காக்கள், பொழுது போக்கு பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நாய்க்குக் கல்யாணம் செஞ்சதெல்லாம் ஓகே.. அப்போது கூட பாரத் மாதா கி ஜெய் என்று கோஷம் போட்டதுதான் சற்றே வித்தியாசமாக இருந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+