Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛வாவ்’.. ‛கூகுள்மேப்’ உதவியோடு செல்போன் திருடனை பிடித்த இளைஞர்! நாகர்கோவிலில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: நாகர்கோவில் ரயிலில் பயணித்த தனது தந்தையின் செல்போனை திருடி சென்ற நபரை ‛கூகுள்மேப்' உதவியுடன் பிடித்த சுவாரசிய சம்பவம் வெளியாகி உள்ளது.

‛கூகுள் மேப்'.. நமது அனைவரின் செல்போனிலும் இப்போது பயன்பாட்டில் இருக்கிறது. தெரியாத இடங்களுக்கு செல்ல தேவையான வழியை காட்டும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தினமும் இந்தியாவில் பல லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

 How young man recovered the stolen phone from his fater in a moving train with a help of Google Map? details here

இருப்பினும் சில நேரங்களில் ‛கூகுள் மேப்' உதவியை நாடுவோர் சிக்கலிலும் சிக்கி உள்ளனர். இதுதொடர்பான செய்திகளை நாம் படித்துள்ளோம். ஆனால் இப்போது ‛கூகுள்மேப்' உதவியுடன் இளைஞர் ஒருவர் தனது தந்தையிடம் செல்போன் திருடிய நபரை கண்டுபிடித்துள்ளார். இது எப்படி நடந்தது?, திருடனை பிடித்தது எப்படி? என்பது பற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Raj Bhagat P #Mapper4Life என்ற பெயரில் எக்ஸ் வலைதளத்தை பயன்படுத்தும் நபர் அதில் கூறியுள்ள விபரம் வருமாறு: என் தந்தை நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு நாகர்கோவில் - காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் (Nagercoil - Kacheguda express) ஸ்லீப்பர் வகுப்பில் சென்று கொண்டிருந்தார். நாகர்கோவிலில் இருந்து அதிகாலை 1:43 மணிக்கு அவர் ரயில் ஏறினார். ரயில் காலியாக இருந்தது.

அப்போது என் அப்பாவுடன் ஏறிய மற்றொரு நபர் எனது அப்பாவின் பேக் மற்றும் செல்போனை திருடிவிட்டு திருநெல்வேலி சந்திப்பில் ரயிலில் இறங்கி உள்ளார். இதை எனது அப்பா உணர்ந்து அதிர்ச்சியானார். இதையடுத்து அந்த நபரை என் அப்பா ரயிலில் தேடினா். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நண்பரின் செல்போனில் இருந்து என்னை அழைத்தார். அதிகாலை 3:51 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு செல்போன் மற்றும் பை திருடுப்போனதை தெரிவித்தார்.

அதிர்ஷ்டவசமாக எனது தந்தையின் செல்போனில் Location Sharing ஆன் செய்யப்பட்டு பகிரப்பட்டு இருந்தது. இதையடுத்து செல்போன் இருக்கும் இடத்தை என்னால் கண்காணிக்க முடிந்தது. அப்போது அந்த செல்போன் ​​திருநெல்வேலி மேலப்பாளையம் அருகே இருந்தது தெரியவந்தது. அதோடு அவர் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்னொரு ரயிலில் புறப்பட்டு செல்வது தெரியவந்தது.

இதையடுத்து செல்போன் திருடனை பிடிக்க எனது நண்பரான உள்ளூர் திமுக பிரமுகர் பாபினை அழைத்தேன். அவரும் நானும் திருடனை பிடிக்க நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றோம். ரயில்வே காவலர் ஒருவரும் எங்களுடன் இருந்தார். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (Kanniyakumari express) ரயில் நிலையம் வந்தது. அதில் இருந்து திருடன் இறங்கினான். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்தால் திருடனை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து எனது தந்தை வைத்திருந்த கருப்பு நிற பேக்கை வைத்து அவரை அடையாளம் காண முயன்றோம். மேலும் ‛லைவ் லோகேஷன்' மூலம் அவரை பின்தொடர முடிந்தது. அப்போது நாகர்கோவில் ரயில் நிலையத்தை அண்ணா பஸ் நிலையம் மற்றும் வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் பஸ்சில் சென்றதை அறிந்தேன். நாங்கள் அவரை பைக்கில் பின்தொடர்ந்தோம்.

அதன்பிறகு 2 மீட்டர் தொலைவில் அந்த நபரை கண்டறிந்தேன். எனது தந்தை சிஐடியூ தொழிற்சங்க உறுப்பினர். அவர் வைத்திருந்த பேக்கில் சிஐடியூ என எழுதப்பட்டு இருந்தது. இதன்மூலம் அந்த நபரை அடையாளம் கண்டேன். நானும் எனது நண்பரும் பஸ் ஸ்டாண்டில் திருடனை பிடித்து பஸ் ஸ்டாண்டில் இருந்த மற்றவர்களின் உதவியுடன் பொருட்களை மீட்டோம்.

அந்த நபர் எனது தந்தை மட்டுமின்றி இன்னும் வேறு பயணிகளுடன் திருட்டில் ஈடுபட்டுள்ளார். செல்போன் சார்ஜர், புளூடூத் இயர்போன்கள், ரூ.1000 என பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். '' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+