வா ஸ்ருதி போலாம்.. இளம்பெண் என மூதாட்டி கையை பிடித்து இழுத்த இளைஞர்கள்! அப்புறம் நடந்த 'சம்பவம்'
கன்னியாகுமரியில் இளைஞர்கள் மூதாட்டியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் இளம்பெண் என நினைத்து மூதாட்டியை கையை பிடித்து இழுத்துள்ளனர் 2 இளைஞர்கள்.. அப்பறம் என்ன ஆச்சு தெரியுமா?
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைந்த அளவில் நடக்கும் மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இதற்கு இங்குள்ள மக்களின் படிப்பறிவும் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இளம்பெண் என நினைத்து மூதாட்டியிடம் இளைஞர்கள் இருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஸ் ஸ்டாண்டு
அதாவது கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள ஹோட்டலில் மூதாட்டி ஒருவர் வேலை பார்த்து வந்திருக்கிறார். தினமும் நண்பகல் 12 மணிக்கு சென்று நள்ளிரவில்தான் பணியிலிருந்து வீடு திரும்புவார். இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் காலம் தள்ளி வந்திருக்கிறார். இந்நிலையில்தான் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதாவது, நேற்றிரவு இவர் ஹோட்டலிலிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்துகொண்டு இருந்துள்ளார்.

ஆபாசம்
அப்போது அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் இவரை பின்தொடர்ந்து வந்திருக்கின்றனர். தொடக்கத்தில் இவர் இதனை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கொஞ்சம் தொலைவு வந்த பின்னர் இரட்டை அர்த்தத்தில் அந்த இளைஞர்கள் சத்தமாக தங்களுக்குள் பேசியுள்ளனர். அப்போது இவர் எதை பொருட்படுத்திக்கொள்ளவில்லை. இதன் பின்னர் நேரம் போக போக இளைஞர்கள் வார்த்தைகள் ஆபாசமாக இருந்துள்ளன. ஏதோ குடிகாரர்கள் எதையோ உளறிக்கொண்டு வருகின்றன்றனர். என்று மூதாட்டி பெரியதாக கண்டுகொள்ளாமல் நடந்திருக்கிறார்.

என்ன விஷயம்?
பின்னர் திரும்பி பார்க்கையில் தனக்கு நெருக்கமாக இளைஞர்கள் வந்துகொண்டிருப்பதை பார்த்து ஷாக்காகியுள்ளார். என்ன விஷயம்? ஏன் என் பின்னால் வருகிறீர்கள் என்று கேட்டதற்கு மூதாட்ளை இளைஞர்கள் தொட்டு தொட்டு பேசியுள்ளனர். இதனை எதிர்பார்க்காத மூதாட்டி தான் கையில் வைத்திருந்த கம்பை கொண்டு ரெண்டு போடு போட்டு சத்தம் போட்டியிருக்கிறார். இந்த சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் என்ன ஏது என்று ஓடி வந்து கேட்டிருக்கின்றனர்.

மூதாட்டி
மூதாட்டி தனக்கு நேர்ந்ததை கூற, மக்கள் அந்த இரண்டு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் விசாரித்ததில் இரண்டு இளைஞர்களும் கஞ்சா போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், சுற்றுலாவுக்காக இங்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளனர். இருட்டில் தங்களுக்கு முன்னாள் சென்றது இளம்பெண் என்று நினைத்து வம்பிழுத்ததாகவும் கூறியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
