நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாகர்கோவில் வந்த கிருஷ்ணவேணி.. ஓடும் ரயலில் 35 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை

Google Oneindia Tamil News

Recommended Video

    நாகர்கோவிலில் ஓடும் ரயலில் 35 பவுன் நகை, ரூ. 1.5 லட்சம் பணம் கொள்ளை-வீடியோ

    நாகர்கோவில்: திருமண நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டிற்கு வந்த ரயில் பயணிகளிடம் பணம் நகை கொள்ளை பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வந்த கிருஷ்ணவேணி என்பவரிடம் 35 சவரன் நகை 1.5 லட்சம் ரூபாய் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் செந்தில் குமார் தனது மனைவி கிருஷ்ணவேணி மற்றும் உறவினர்களுடன் நாகர்கோவிலில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் வந்துள்ளனர்.

    jewells and cash stolen in running train

    நாகர்கோவில் ரயில் நிலையம் வந்த போது தன்னுடைய கைப்பையை காணாததால் கிருஷ்ணவேணி கூச்சலிட்டு உள்ளார். இதனை அடுத்து நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரயில்வே போலீசார் ரயில் பெட்டிகள் முழுவதும் சோதனை நடத்தினர். ஆனால் கிருஷ்ணவேணியின் கைப்பை எனது கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கிருஷ்ணவேணி ரயில்வே போலீசாரிடம் கூறும்போது தங்களது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து வந்ததாகவும் கைப்பையில் 35 சவரன் நகைகள் இருந்ததாகவும் மேலும் பணமாக ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு வந்ததாகவும் இவை அனைத்தும் திருடு போயுள்ளதாகவும் கூறியுள்ளார்

    jewells and cash stolen in running train

    இதனையடுத்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா மற்றும் பல்வேறு உறவினர்கள் நிகழ்ச்சிகளுக்கு வரும் பயணிகளிடம் இதுபோன்று கொள்ளை சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகியுள்ளது. பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் உடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

    English summary
    Jewells and cash were stolen in running train in Nagercoil, police are investigating.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X