'லாயக்கு இல்லை'.. அரசு பஸ்ஸை ஆர்டிஓவிடம் ஒப்படைத்த டிரைவர்.. மறுநாளே வந்த ஆக்சன்.. இப்படி ஆகிடுச்சே
நாகர்கோவில்: நாகர்கோவிலில் பழுதான அரசுப் பேருந்தை ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்திய விவகாரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பெர்க்மான்ஸ்-ஐ பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பேருந்தை ஆய்வு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள், ஒட்டுநர் பெர்க்மான்ஸ் குறிப்பிடும் அளவுக்கு பேருந்து பழுதாகவில்லை என கூறி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாட்டில் காற்று மாசைக் குறைக்கும் வகையில், 15 ஆண்டுகள் பழமையான பொது போக்குவரத்து வாகனங்களையும், 20 ஆண்டுகள் பழமையான அரசின் சொந்த வாகனங்களையும் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களின் கீழ் உள்ள 20,926 பேருந்துகளில் சுமார் 1,500 பேருந்துகள் ஓடுவதற்கு லாயக்கு இல்லாத நிலையில் இருந்தன. இதனை அடுத்து 2,213 பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் பழைய அரசு பேருந்துகள் பல ஓட்டை உடைசலாக இருக்கின்றன. இந்த பேருந்துகளில் பல இப்போது இலவச பேருந்துகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சில பேருந்துகள் இரு நகரங்களிடையே ஓடும் பேருந்துகளாகவும் சென்று வருகின்றன.
அப்படித்தான் கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் TN74N1841 என்ற அரசு பேருந்து ஓடிக்கொண்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளதாம். நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி இந்த அரசு பேருந்து சென்று வந்து கொண்டிருந்தது.
அடிக்கடி பிரேக் பிடிக்காத காரணத்தால் ஆத்திரம் அடைந்த டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் ஆர்டிஒ அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி டிரைவர் பெர்க்மான்ஸ் கூறும் போது, நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து அடிக்கடி பழுதாகி நின்றது. பிரேக் பிடிக்கவில்லை. சாலையில் ஓடவே தகுதியற்றதாக இருந்தது. இதுபற்றி பல முறையும் புகார் அளித்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆர்டிஓ அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டோம் என்றார்.
பிரேக் இல்லாத அரசு பேருந்தை RTO அலுவலகத்தில் ஒப்படைத்த. அரசு ஓட்டுநர்
— velmurugan (@velmurugantheni) July 18, 2023
கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் TN74N1841 இந்த அரசு பேருந்து இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் இல்லாமல் 👇 இருந்ததது. #setc #bus #kanyakumari pic.twitter.com/Y5JCAI0fB1
மக்கள் உயிரைக் காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதை கருதலாம் என்று சமூக வலைதளங்களில் சிலர் டிரைவர் மற்றும் நடத்துனரின் செயலை பாராட்டினார்கள். அதேநேரம் ஓட்டுநர் அரசுப் பேருந்தை ஆர் டி ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தது தவறு அவரைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினார்கள்.
இந்நிலையில் நாகர்கோவிலில் பழுதான அரசுப் பேருந்தை ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்திய விவகாரத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர் பெர்க்மான்ஸ்-ஐ பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேருந்தை ஆய்வு செய்த போக்குவரத்து கழக அதிகாரிகள், ஒட்டுநர் பெர்க்மான்ஸ் குறிப்பிடும் அளவுக்கு பேருந்து பழுதாகவில்லை என கூறி சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications