கன்னியாகுமரியில் அருள் சுனிதாவுக்கு நேர்ந்த துயரம்.. கல்லால் அடித்து கொன்ற கொடூர கணவன்
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம், சிலுவை நகர் பகுதியை சேர்ந்தவர் மரிய டெல்லஸ் வயது 42. இவர் நடமாடும் வண்டி வைத்து வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஆவார்

இவர் மனைவி அருள் சுனிதா, 37. திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்களுக்கு பிளஸ் டூ படிக்கும் ஒரு மகனும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய மரிய டெல்லஸ், கடந்த ஓராண்டுக்கு முன்பு மனைவி தாக்கினார். இது குறித்து அவர் அளித்த புகாரில் கைதான மரிய டெல்லஸ், 15 நாள்கள் சிறையில் இருந்து வெளி வந்தார்.

பின்னர், குடும்பத்தினர் சமரசம் பேசியதை அடுத்து, மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று வியாபாரம் முடித்து விட்டு வீடு சென்ற மரிய டெல்லஸ், குடிபோதையில் மனைவியை அடித்து கல்லால் தாக்கினார்.
இதில் ரத்த காயங்களுடன் கீழே விழுந்த அருள் சுனிதாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் அவர் இறந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த டி.எஸ்.பி., பாஸ்கரன், பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், விசாரித்தனர். இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்த கன்னியாகுமரி போலீசார் மரிய டெல்லஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications