Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆபாச காசி.. லொகேஷன் ஷேரிங்.. நாசமான பெண்களின் வாழ்க்கை.. டெக்னாலஜியை வைத்து அராஜகம்.. அதிரும் தகவல்!

நாகர்கோயில் காசியின் நண்பன் கைதாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: பிளேபாய் காசி சமாச்சாரம் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.. டெக்னாலஜியை வைத்தே பெண்களை ஏமாற்றி உள்ளனர்.. அதாவது "லொகேஷன் ஷேரிங்" என்பதன் மூலம் பல பெண்களின் வாழ்க்கை நாசமாகி உள்ளது.. அவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் பொதுவெளியில் அரங்கேறி உள்ளது!

Recommended Video

    nagercoil court kasi crime Archives | கோர்ட் வளாகத்தில் ஹார்ட் சிக்னல்... கொஞ்சம் கூட பதறாத கா

    நாகர்கோயில் காசி என்ற 26 வயது இளைஞன் பல பெண்களிடம் பழகி ஏமாற்றி உள்ளார்.. காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி சீரழித்துள்ளார்.. அந்த வீடியோக்களை படம், வீடியோ எடுத்து வைத்து மிரட்டி பணம் பறித்துள்ளார்.

    சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.. நிலமோசடி, கந்துவட்டி என பல புகார்கள் உள்ளன.. நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோ படங்களை போலீசார் கைப்பற்றினர்.. காசியிடம் போலீஸ் விசாரணையும் 3 நாள் நடந்தது.. மாவட்ட வாரியா, மாநில வாரியாக காசியால் ஏமாற்றப்பட்ட பெண்களின் லிஸ்ட் தயாராகிறது.

    கும்பல்

    கும்பல்

    காசி விவகாரம் வெளியே வந்தபோதே, இவருக்கு பின்னால் ஒரு கும்பலே இருக்கிறது என்று சந்தேகிக்கப்பட்டது.. அரசியல் பிரமுகர்களும் உடந்தை என்று சொல்லப்பட்டது.. காசியின் நெருங்கிய நண்பர்கள் யார், யார் என போலீசார் கண்டறிந்து விசாரணையும் மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியானது. அந்த வகையில் ஒரு நண்பர் சிக்கி உள்ளார்.. டேசன் ஜினோ.. இவருக்கு வயது வெறும் 19தான் ஆகிறது.

    மிரட்டல்

    மிரட்டல்

    இவரிடம் 2 முக்கியமான விஷயங்களை போலீசார் கறந்துள்ளனர்.. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு பெண்களை அழைத்து சென்று ஏமாற்றி உள்ளார் காசி.. அப்போதுதான் நெருக்கமாக ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்திருக்கிறார். மிரட்டியும் தனக்கு பணம் தராத பெண்களின் ஆபாச வீடியோ, போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்தது 2 முக்கிய நபர்களாம்.. அதில் ஒருவர்தான் இந்த ஜினோ.

    நண்பர்

    நண்பர்

    இதை பற்றி போலீசார் சொல்லும்போது, "காசியின் நண்பர்கள் சிலர் லொக்கேஷன் ஷேரிங் மூலம் ஆன்லைனிலேயே இருந்துள்ளனர்... அவர்கள் எங்கு இருந்தாலும் மற்ற நண்பர்களுக்கு தெரியும் அளவுக்கு இந்த டெக்னாலஜியை பயன்படுத்தியுள்ளனர்... காசி ஜிம்முக்கு போகும்போது, கோவையில் படிக்கும் பெண் ஒருவரும் ஜிம்முக்கு போயுள்ளார்.. அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இப்படி லொக்கேஷன் ஷேரிங்கில் இருந்த காசியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம்.

    விலகல்

    விலகல்

    இப்போது கைதாகி உள்ள ஜினோதான், சென்னை டாக்டரின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் செய்து ஷேர் செய்திருக்கிறார்.. காசியின் சுயரூபம் அறிந்த பெண்கள் அவரை விட்டு விலக தொடங்குவார்கள்.. பிறகு ஃபேஸ்புக் உள்ளிட்டவையில் இருந்து நட்பை துண்டிப்பார்கள்.. அந்த சமயம் பார்த்து சம்பந்தப்பட்ட பெண்களின் ஆபாச வீடியோ, போட்டோக்களை இந்த ஜினோவுக்குதான் காசி அனுப்புவராம்.. அந்த போட்டோ, வீடியோவை பெற்று கொண்ட ஜினோ, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுப்புவார்.

    மிரட்டல்

    மிரட்டல்

    தன்னுடைய ஆபாச, நிர்வாண போட்டோ, வீடியோக்களை கண்டு பெண்கள் அலறி, இதெல்லாம் உனக்கு எப்படி கிடைத்தன என்று கேட்பார்களாம்.. காசி சொல்ற மாதிரி நடந்துக்கிட் உங்களுக்கு நல்லது.. இல்லாட்டி இந்த நிர்வாண வீடியோ அத்தனையும் சோஷியல் மீடியாவுக்கு போகும் என்று மிரட்டுவாராம் ஜினோ.. இப்படியே இவர்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளனர்" என்றனர் போலீசார். தற்போது காசியின் ஒரே ஒரு ஃபிரண்டுதான் கைதாகி உள்ளார்.. அவரிடமே இவ்வளவு தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், இன்னும் விசாரணை நடத்த நடத்த, என்னென்ன கிளம்பி வர போகிறதோ தெரியவில்லை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+