காங்கிரஸ் உரசி பார்க்கும் கன்னியாகுமரி! இந்த முறை யாருக்கு வெற்றி? தொகுதி நிலவரம் இதோ
நாகர்கோவில்: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடன் கைகோர்த்து 10 தொகுதிகளில் காங்கிரஸ் களம் இறங்குகிறது. இதில் கன்னியாகுமரி முக்கியமான தொகுதியாக பார்க்கப்படுகிறது.
தேசிய அரசியலை நேரடியாக பிரதிபலிக்கும் தொகுதிகளில் கன்னியாகுமரி முக்கியமானது. இங்கு பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் கடந்த சில ஆண்டுகளாக போட்டி நிலவி வருகிறது. 2009ம் ஆண்டு திமுக இங்கு வெற்றி பெற்றது. ஆனால், அதன் பின்னரான தேர்தல்களில் தேசிய கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்த தொகுதியில் நடந்த தேர்தல்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று 1952 தொடங்கி 2004 வரை நடைபெற்ற தேர்தல்கள். இரண்டாவது 2009 தொடங்கி 2021 வரை நடைபெற்ற தேர்தல்கள். அதாவது, 1952-2004 வரை நடைபெற்ற 15 லோக்சபா தேர்தல்கள் நாகர்கோவில் தொகுதி என்கிற பெயரில் நடைபெற்றிருக்கிறது. இதில் 8 தேர்தல்களில் காங்கிரஸ்தான் வென்றிருக்கிறது. மூன்று தேர்தல்களில் பாஜகவும், ஒரேயொருமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வென்றிருக்கிறது.
அதன் பின்னர் 2009-2021 வரை கன்னியாகுமரி தொகுதி என பெயரில் லோக்சபா தேர்தல் நடந்திருக்கின்றன. 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் பெற்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எச்.வசந்தகுமார் 2.4 லட்சம் வாக்குகளையும், திமுக வேட்பாளர் 1.1 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். இதனையடுத்த 2019ம் ஆண்டு தேர்தலில் எச்.வசந்தகுமார் 6.2 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். ஆனால் 2021ம் ஆண்டு அவர் மறைந்ததையடுத்தையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில், வேட்பாளர்களை பொறுத்த அளவில் இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் விஜய் வசந்த் மீண்டும் களமிறக்கப்படுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக சார்பில், பொன்.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட இருக்கிறார். எப்படி இருப்பினும், இந்த தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் சவாலானதாக இருக்கிறது.
ஏனெனில், சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரியின் விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருந்தார். எனவே எம்எல்ஏ போனாலும் கட்சிக்கு செல்வாக்கு குறையவில்லை என்று நிரூபிக்க வேண்டிய இடத்தில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், விஜயதாரணியின் விலகலை முன்னிலைப்படுத்தி இந்த முறை எப்படியாவது தொகுதியை வென்று விட வேண்டும் என்று பாஜக பிளான் போட்டுள்ளது. இப்படியாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டிய நிலவி வருகிறது.
தொகுதியின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவை ஒட்டி இருப்பதால், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் தாக்கம் இங்கு வலுவாக இருக்கிறது. அதேநேரம், 1982ல் உருவான மண்டைக்காடு கலவரம் இந்துத்துவா சக்திகளை வேரூன்றி வளர செய்திருக்கிறது. இது அப்படியே பாஜகvsகாங்கிரஸ் என்கிற சூழலாக அரசியலில் பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications