Kanyakumari: கன்னியாகுமரியில் கண்ணியம் மீறிய பாதிரியார்.. 17 வயது சிறுவனுக்கு நடந்த அதிர்ச்சி! போலீஸ் அதிரடி
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் வேதாகம விடுமுறைக்கு வந்த சிறுவனை, மூளை சலவை செய்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் மீது போக்சோ வழக்கு பாய்ந்திருக்கிறது. இதனையடுத்து பாதிரியார் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வேறு எந்த மாவட்டத்தை காட்டிலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்று மதத்தினர் அதிகம் இருக்கின்றனர். இறை ஒழுக்கத்தை பயிற்றுவித்து வளர்ப்பதை கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்வின் ஒரு கடமையாக கருதுகின்றனர். எனவே சிறு வயதிலிருந்து குழந்தைகளை தேவாலயத்திற்கு அனுப்பி வளர்க்கின்றனர். அப்படித்தான் தக்கலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனும் தக்கலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிறிஸ்தவ சபைக்கு சிறு வயதிலிருந்து வந்திருக்கிறார்.

இப்படி இருக்கையில்தான் சபையின் பாதிரியாருக்கும் சிறுவனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையும், பழக்க வழக்கங்களும் அதிகரித்திருக்கின்றன. அடிக்கடி பாதிரியார் சிறுவனை தனியாக அழைத்து பேசுவதை பார்த்த பெற்றோர்கள் பெரியதாக சந்தேகப்படவில்லை. எனவே, இந்த பழக்கம் நீடித்திருக்கிறது.
இந்நிலையில்தான் திடீரென சிறுவனின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிய தொடங்கியுள்ளன. சிறுவன் வெளியில் சொல்ல முடியாத ஏதோ ஒரு விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக்கொண்டிருந்தார். இதை தெரிந்துக்கொண்ட பெற்றோர், சிறுவனிடம் மனம்விட்டு பேசியிருக்கின்றனர். அப்போதுதான், பாதிரியார் சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. வேதாகம விடுமுறை (VBS) வகுப்பிற்கு சென்ற போது இந்த கொடூரம் நடந்திருக்கிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுவன் தக்கலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தக்கலை போலீசார் பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட பாதிரியார் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வேதாகம விடுமுறை (VBS) வகுப்பிற்கு வந்த சிறுவனிடம் பாதிரியார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இம்மாவட்டத்தில் பாதிரியார்கள்/மத போதகர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் சிக்குவது என்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னரும் இதேபோன்ற வேறு ஒரு பாதிரியார் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டபோது சிக்கியிருக்கிறார். இதே தக்கலையில் மற்றொரு மத போதகர், உடல்நலம் சரியில்லாத பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று சிக்கியிருக்கிறார்.
ரெஜிமோன் எனும் மத போதகர் தக்கலையில் உள்ள பிரபல தேவாலயத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்த தேவாலயத்திற்கு அடிக்கடி வரும் இளம்பெண் ஒருவர், தன்னுடைய உடல் நலம் சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உடல் நிலை குறித்து மத போதகரிடம் விளக்கியுள்ளார். இளம்பெண்ணின் பலவீனத்தை புரிந்துக்கொண்ட மத போதகர், கணவரின் விந்தில் விஷம் இருக்கிறது, எனவே என்னுடன் சேர்ந்து இருந்தால் அது சரியாகிவிடும் என கூறியுள்ளார்.
இதனையடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications