அட.. தமிழகத்தில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா?.. ஆச்சரியத்தில் மதுபிரியர்கள்.. எதுக்கு தெரியுமா?
நாகர்கோவில்: தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் பல கோடிகளை தாண்டுவது வழக்கம்.
இப்படி அரசுக்கு வருமானத்தை கொட்டி கொடுப்பதில் முதலிடம் பிடிக்கும் எங்களுக்கு டாஸ்மாக்கில் சரிவர வசதிகள் செய்து தருவதில்லை'' என்று குடிமகன்கள் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர். டாஸ்மாக் பார்கள் கொரோனா காரணமாக இப்போது செயல்படுவதில்லை.
ஆனால் பார்கள் இயங்கும் நேரத்தில் அங்கு விற்கப்படும் பொருட்களுக்கும், நொறுக்கு தீனிகளுக்கும் நிர்ணயித்த விலையை விட மிக அதிக விலை விற்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன.

கூடுதல் பணம் வசூலிப்பு
இது தவிர மதுபானங்களுக்கு அரசு ஒருவிலை நிர்ணயித்து இருந்தால் டாஸ்மாக்கில் அதை விட கூடுதலாக பணம் வசூலிக்கின்றனர் என்பது நீண்ட கால குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. குறிப்பாக ஒரு குவார்ட்டர் பாட்டிலுக்கு மட்டும் 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாகவும், இதுபற்றி பலமுறை புகார்கள் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த புகார்களை கேட்ட தமிழக அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டது.

அரசு உத்தரவு
டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பார்வையில்படும்படி விலைப்பட்டியல் வைக்க வேண்டும்.மதுவிற்பனைக்கு பற்றுசீட்டு ரசீது பில் புத்தகம் மூலம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டது. ஆனால் தமிழகத்தின் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் இந்த உத்தரவை கடைபிடிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விதிமுறைகளை கச்சிதமாக பின்பற்றும் ஒரு டாஸ்மாக் கடையை பார்த்து குடிமகன்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர்.

கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அருகே முட்டைக்காடு பகுதியில் இந்த 'டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ''மதுபிரியர்கள் வாங்கும் மதுபானத்திற்கு ஏற்ப ரசீது வழங்கப்படும். இந்த கடையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதில்லை. விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம்' என்று கூறி செல்போன் எண் குறிக்கப்பட்ட அறிவிப்பு அட்டைகள் கடையின் முகப்பு பகுதியில் தொங்க விடப்பட்டுள்ளது.

வாய் பிளந்த குடிமகன்கள்
இந்த டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் ''என்ன.. நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு டாஸ்மாக் கடையா'' என்று ஒரு நிமிஷம் வாய் பிளந்து நிற்கின்றனர். அட்டையில் குறிப்பிட்டபடி இந்த டாஸ்மாக் கடையில் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே மதுபானம் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் இப்படி மாற வேண்டும் என்று குடிமகன்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல்












Click it and Unblock the Notifications