100 பெண்கள்.. ஆபாச வீடியோக்கள்.. ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை.. சீரழித்த நாகர்கோவில் காசி

100 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த நாகர்கோயில் இளைஞர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்: ஸ்கூல் பிள்ளைகள் முதல் பெண் டாக்டர் வரை யாரையுமே விடவில்லை காசி.. கிட்டதட்ட 100 பெண்களை ஏமாற்றி சீரழித்து உள்ளார்.. ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்து கொண்டு மிரட்டி பணம் பறித்துள்ளார்.. இப்போது காசியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.

Recommended Video

    பள்ளி மாணவி முதல் டாக்டர் வரை... அதிர வைத்த நாகர்கோவில் காசி

    நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் காசி.. வயது 26.. சிக்ஸ் பேக் உடம்பு.. கூலிங்கிளாஸ், பைக் என மாஸ் காட்டி வரும் இவர் ஒரு கோழிக் கடை ஓனர்.

    சென்னையில் உள்ள ஒரு காலேஜில் பிஏ படித்து உள்ளார்... காலேஜில் படிக்கிறபோதே சென்னையை சேர்ந்த ஒரு பெண் டாக்டரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. இது நெருக்கத்தை ஏற்படுத்தியது.

    கல்யாணம்

    கல்யாணம்

    காலேஜ் படிப்பு முடிந்ததும் கல்யாணம் செய்து கொள்வதாக பெண் டாக்டரிடம் கலர் கலர் ரீல் விட்டு, பல்வேறு இடங்களுக்கு அவரை அழைத்து சென்று நெருக்கமாக இருந்துள்ளார்... அந்த காட்சிகளை செல்போனில் வீடியோவாகவும், சிலவற்றை படங்களாகவும் எடுத்துக் கொண்டார். பிறகு படிப்பு முடிந்ததும், நாகர்கோவிலுக்கு காசி வந்துவிட்டார்.. அப்போது முதல் பெண் டாக்டரிடம் பணம் கேட்டு மிரட்ட ஆரம்பித்துள்ளர்.. பணம் தரவில்லையென்றால் நெருக்கமாக இருக்கும் போட்டோ, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் பரப்பி விடுவதாகவும் சொல்லி உள்ளார்.

    தொந்தரவு

    தொந்தரவு

    அது மட்டுமில்லை.. அந்த போட்டோக்களை மேலும் ஆபாசமாக சித்தரித்தும் வெளியிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதை கேட்டு பயந்து போன பெண் டாக்டர், காசி கேட்ட போதெல்லாம் பணம் தந்துள்ளார்.. 5 லட்சம் ரூபாய் தந்திருக்கிறாராம்.. ஆனால் கையில் பணம் புழங்க ஆரம்பித்ததும், டார்ச்சரும், மிரட்டலும் அதிகமாக உள்ளது... ஒரு கட்டத்தில் காசியின் தொந்தரவு அதிகரிக்கவே, பெண் டாக்டர் பணம் தருவதை நிறுத்திவிட்டார்.

    புகார்

    புகார்

    இதனால் ஆத்திரம் அடைந்த காசி, பெண் டாக்டரின் ஆபாச படங்கள், வீடியோவை, ஷேர் செய்ய ஆரம்பித்தார்.. அது அவரால் போலியாக உருவாக்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் பதிவுகள் ஆகும். இதை கொஞ்சமும் எதிர்பாராத பெண் டாக்டர் கன்னியாகுமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் செய்தார். இதையடுத்து போலீசார் காசியை கைது செய்துள்ளனர்.

    படிப்பு

    படிப்பு

    காசியை பற்றி பல தகவல்கள் கிடைத்தவாறே உள்ளன.. 26 வயதாகும் இவருக்கு சுஜி என்ற மற்றொரு பெயரும் உள்ளது. அந்த கோழிக்கறி முதலில் கடையை வைத்து நடத்தி வந்தது காசியின் அப்பாதானாம்.. படிப்பு முடிந்த காசி அந்த கடையில் உதவியாக இருந்திருக்கிறார்.. சாயங்காலம் கடை முடிந்தபிறகு சோஷியல் மீடியாவில் மூழ்கிவிடுவாராம்.. ஜிம் பாடி போட்டோக்கள் நிறைய பதிவிடுவார் என்கிறார்கள். அப்போது நிறைய பெண்ணியம் குறித்த கருத்துக்களை பதிவு செய்வாராம்.

    வீடியோக்கள்

    வீடியோக்கள்

    இந்த கருத்துக்களை பார்த்து பெண்கள் விழுந்துவிட்டனர்.. லைக்குகளை போட்டு காசியிடம் நட்பு வளர்த்து கொண்டனர்.. அந்த பெண்களின் செல்போன் நம்பரை வாங்கி தனியாக அழைத்து பேசி.. நெருக்கம் காட்டி.. அந்த வீடியோவையிம் எடுத்து வைத்து கொண்டு பணம் பறிப்பாராம்.காசியின் செல்போன் உட்பட அவரது பல ஹர்ட்டிஸ்குகளையும் போலீசார் கைப்பற்றினர்... அதில் ஏராளமான வீடியோக்கள் பதிவாகி இருந்தன.. கிட்டத்தட்ட 100 பெண்களின் வீடியோக்கள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ந்தனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    காஸ்ட்லி பைக்கில் பெண்களை அழைத்து செல்வது, அவர்களுடன் பேசிக் கொண்டே பைக் ஓட்டுவது, நெருக்கமாக இருப்பது என விதவிதமான வீடியோ, போட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
    அந்த பெண்கள் எல்லாம் யார், என்ன, எத்தனை பேரை காசி ஏமாற்றி உள்ளார் என்ற விசாரணையிலும் இறங்கி உள்ளனர். ஸ்கூல் மாணவிகளை கூட காசி விட்டு வைக்கவில்லை என்கிறார்கள்.. கிட்டத்தட்ட பொள்ளாச்சி சம்பவத்தை போலவே இந்த சம்பவமும் கடுமையான அதிர்ச்சியையும், பீதி நிறைந்த பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+