Video: கிறிஸ்துமஸ் வந்துட்டாலே.. இந்த நட் கிராக்கரும் பின்னாடியே ஓடி வந்துருவார்..!
நாகர்கோவில்: எங்கு பார்த்தாலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்தான்.. களை கட்டியுள்ளது உலகமே... வீடுகள் தோறும் அலங்காரங்கள் தடபுடலாக ஓடிக் கொண்டுள்ளன. சர்ச்சுகளில் விழாக் கோலம்தான், கரோல்களின் இனிய இசை காதுகளை குளிர வைத்து வருகிறது.
இந்த நேரத்தில் நாம் ஒரு முக்கியமான நபரை சந்தித்தாக வேண்டும்.. அவர்தான் நட் கிராக்கர்.. பெயரே ஒரு மாதிரியா இருக்கேன்னு யோசிக்கிறாங்களா.. ஆமாங்க.. அவர் நட் கிராக்கரேதான்.. அதாவது ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அழகு பொம்மைதான் இந்த நட் கிராக்கர்.

17வது நூற்றாண்டில் ஜெர்மனியில் இந்த நட் கிராக்கர் முதல் முறையாக உருவாக்கப்பட்டார். பாதாம் போன்ற பருப்புகளை உடைக்க இந்த நட் கிராக்கர் பொம்மையின் வாய்ப் பகுதியை பயன்படுத்தினர். ஆனால் காலப் போக்கில் இந்த பொம்மை பிரபலமாகி விளையாட்டுப் பொம்மையாக மாறியது. ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக ஆரம்பித்தது.
மேலும் விதம் விதமான உருவங்களையும் இது பெற ஆரம்பித்தது. போலீஸ்காரர், டாக்டர், கிறிஸ்துமஸ் தாத்தா என விதம் விதமான ரூபங்களில் இந்த நட் கிராக்கரை வடிவமைத்து விற்க ஆரம்பித்தனர். பிறகு இது கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களிலும் தவிர்க்க முடியாத ஒரு பொம்மையாக மாறியது.

அதேபோல அமெரிக்காவிலும் இவர் 2ம் உலகப் போரின் முடிவில் நுழைய ஆரம்பித்தார். அதாவது 2ம் உலகப் போரின்போது ஜெர்மனியில் முகாமிட்டிருந்த அமெரிக்கப் படையினர், போர் முடிவில் நாடு திரும்பியபோது அவர்களுக்கு நட் கிராக்கர் பொம்மைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அப்படித்தான் இவர் அமெரிக்காவுக்குள் வந்தார்.
இன்று அமெரிக்காவில் இந்த நட் கிராக்கர் பொம்மைகள் மிக மிகப் பிரபலம், விதம் விதமான உருவத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அசத்திக் கொண்டிருக்கிறார் நட் கிராக்கர்.. அட என்னங்க.. நம்ம ஊரிலும் நட் கிராக்கரை கூட்டிக் கொண்டு வந்து விடலாமா..!
- Inkpena சஹாயா
-
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
B1/B2 Visa: காசு கொடுத்த 10 நாளில் அமெரிக்கா செல்ல விசா.. ப்ரீமியம் சேவையாம்! -
நாகர்கோவிலில் ஹெல்மெட் போடாமல் போனால்.. வீடு தேடி வரப்போகும் அபராதம்.. வந்தது ஏஐ கேமரா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு












Click it and Unblock the Notifications