ஒரு பக்கம் Delimitation.. இன்னொருபுறம் அண்ணா சிலைக்கு மாலை! நாகர்கோவில் மோடி சம்பவம்
நாகர்கோவில்: தொகுதி மறுவரையறை விஷயத்தில் மொத்த எதிர்க்கட்சிகளும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு எதிராக திரும்பியிருக்கின்றன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக இன்று நாகர்கோவில் வந்த மோடி, மாநில உரிமைக்காக போராடிய அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி தலைவணங்கி மரியாதை செலுத்தியிருக்கிறார்.
ஒருபுறம் தொகுதி மறுவரையறை மூலம் மாநிலங்களக்கான உரிமைகளை பறித்துக்கொண்டு, மறுபுறம் மாநில உரிமைகளுக்காக போராடிய அண்ணாவுக்கு தலைவணங்குவது ஏன் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டுக்கு ஆபத்து
மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அமல்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அதுவும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில். இதற்கு முன்னரும் இப்படித்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தது. ஆனால், எதிர் காலத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தி, பின்னர் தொகுதி மறுவரையறையை அமல்படுத்த வேணடும் என்று சொல்லப்பட்டிருந்தது.
தொகுதி மறுவரையறை
ஆனால், 1971 மற்றும் 2001 என இரண்டு முறையும் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும்போது, வட மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியிருக்கவில்லை. எனவே, 25 ஆண்டுகள் டைம் கொடுக்கப்பட்டது. 2026ம் ஆண்டுடன் இந்த கெடு முடிவடையும் நிலையில் இப்போதும் மக்கள் தொகையை வட மாநிலங்கள் கட்டுக்குள் கொண்டுவரவில்லை.
மக்கள் தொகை
எனவே மக்கள் தொகையை கட்டுப்படுத்தாதவரை, பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதை ஏற்காத மத்திய அரசு தொகுதி மறுவரையறையை அவசர கதியில் அமல்படுத முயன்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டின் பலம் நாடாளுமன்றத்தில் குறையும்.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் இதற்காக குரல் கொடுத்து வரும் இந்த சூழலில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவில் ரோடு ஷோ மேற்கொள்ள வந்திருக்கிறார்.
மோடியின் செயல்
முன்னதாக அவர், அண்ணா சிலைக்கு மலர்தூவி தலை வணங்கி மரியாதை செலுத்தியிருந்தார். இதுதான் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடிய அண்ணாவை வணங்கிக்கொண்டே, தொகுதி மறுவரையறை போன்ற தமிழ்நாட்டு விரோத நடவடிக்களை எப்படி மேற்கொள்ள முடிகிறது? என திமுவினர் கேள்வி எழுப்பியிருக்கறது.
-
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங்












Click it and Unblock the Notifications