நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அண்ணாந்து" பார்க்கும் பாஜக.. ராகுல் காந்திக்கு எகிறும் மவுசு.. இன்று 4வது நாள் நடைபயணம் துவக்கம்

4வது நாள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: ராகுல்காந்தியின், 4வது நாள் நடைபயணம் இன்று 10ம் தேதி முளகுமூட்டில் இருந்து துவங்க உள்ள நிலையில், பொதுமக்களும், காங்கிரஸ் தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யும் விதத்திலும் இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் கன்னியாகுமரியில் நடைபயணம் துவங்கி உள்ளார் ராகுல் காந்தி..

கன்னியாகுமரியில் இருந்து 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களில் 3500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையவுள்ளார்

நல்லா இருக்கீங்களா? வெளிநாட்டு டூர் ப்ளான் என்னாச்சு! 'வில்லேஜ் குக்கிங்’ சேனலை மறக்காத ராகுல்காந்தி நல்லா இருக்கீங்களா? வெளிநாட்டு டூர் ப்ளான் என்னாச்சு! 'வில்லேஜ் குக்கிங்’ சேனலை மறக்காத ராகுல்காந்தி

 தேசிய கொடி

தேசிய கொடி

முதல்நாள் நடைபயணத்தில், அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரிக்கு வந்து கேரவன் வேனில் தங்கினார். இதைப்போல் அவருடன் நடைபயணம் மேற்கொள்ளும் மேலும் 119 பேரும் கேரவனிலே தங்கினர். 2-வது நாள் நடைபயணத்தை அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 7.15 மணியளவில் ராகுல் காந்தி தொடங்கினார். தேசியக் கொடியை ஏந்தியவாறு நடைபயண குழுவினருடன் ராகுல் நடைபயணம் மேற்கொண்டார். நேற்று 3வது நாள் நடைபயணத்தை ராகுல் காந்தி, ஸ்காட் கல்லூரியில் இருந்து தொடங்கினார்...

முகாம்கள்

முகாம்கள்

முகாமில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிறகு இந்த பயணம் தொடங்கியது. அவருடன் காஷ்மீர் வரை பயணிக்கின்ற 118 பேர் மட்டுமின்றி ஏராளமான காங்கிரஸ் தொண்டர்களும் தேசியக்கொடியை ஏந்திய வண்ணம் நடக்க தொடங்கினர்.. சுங்கான்கடை அருகே சென்றபோது தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பிஆர்.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் ராகுல்காந்தியை சந்தித்தனர். அவர்களுடன் சாலையோர கடையில் உட்கார்ந்து டீ குடித்தவாறே கோரிக்கைகளை கேட்டறிந்தார்...

 ஜோதிமணி

ஜோதிமணி

பிறகு ஜோதிமணி எம்பி அவற்றை விளக்கி ராகுல்காந்தியிடம் தெரிவித்தார். சாலையின் 2 புறமும் வீடுகள், மாடிகளிலும் நின்று பயணத்திற்கு வரவேற்பு அளித்த மக்களுக்கு கை அசைத்து ராகுல்காந்தி நன்றி தெரிவித்தார். தக்கலை - மார்த்தாண்டம் சாலையில் அழகியமண்டபம் சந்திப்பில் நேற்றைய பயணத்தை நிறைவு செய்தார். இன்று 4வது நாளில், முளகுமூடு பகுதியில் இருந்து புறப்படுகிறார். மார்த்தாண்டம் நேசமணி கல்லூரியை மதியம் அடைகிறது. அங்கிருந்து மாலையில் குழித்துறை சந்திப்பு, படந்தாலுமூடு வழியாக கேரள பகுதியான தலைச்சன்விளையை அடைகிறது.

 தரமான சம்பவம்

தரமான சம்பவம்

ராகுலின் நடைபயணத்தை பாஜக விமர்சித்து வருகிறது.. இந்த நடைபயணம் ராகுல் உடல் நலனுக்கு வேண்டுமானால் நல்லதாக இருக்கலாம். ஒரு போதும் நாட்டு நலனுக்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ நல்லதாக இருக்காது என்று கருத்து சொல்லி வருகிறார்கள்.. அதிலும் அவரது நடைப்பயணம் நெடுஞ்சாலையில் காலை, மாலை ஒன்றேகால் மணிநேரம் நடைப்பயிற்சி செய்வது போல உள்ளது என்று சீமான் கிண்டலடித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகளோ, ராகுலின் இந்த நடைபயணம்தான், 2024 தேர்தலுக்கான தரமான சம்பவமாக இருக்க போகிறது.. மிக சரியான அரசியலை ராகுல் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதாக கருத்து கூறி வருகிறார்கள்.

English summary
Rahul gandhis Fourth day of india jodo yatra and Volunteers give Rahul gandhi an enthusiastic welcome 4வது நாள் நடைபயணம் மேற்கொள்ளும் ராகுலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X