குமரி+தூத்துக்குடியில் கொடி நாட்டப் போவது எந்த கட்சி? சத்தியம் டிவி கருத்து கணிப்பு
சென்னை: தமிழகத்தில் இன்னும் 8 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், தேர்தலுக்கு முன்னோட்டமாக கருத்துக்கணிப்பை செய்தி ஊடகங்கள் வெளியிட தொடங்கியுள்ளன. தற்போது கன்னியாகுமரியில் உள்ள 6 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து சத்தியம் டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது.
சத்தியம் டிவி, மக்களிடமிருந்து கருத்துகளை பெற்று தற்போது கணிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இரவு 8 மணி நிலவரப்படி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை,

1. கன்னியாகுமரி
2. நகர்கோவில்
3. குளச்சல்
4. கிள்ளியூர்
5. பத்மநாபபுரம்
6. விளவங்கோடு
என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2016 சட்டமன் தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. 2021ல் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் என 2 தொகுதிகளை தவிர மற்ற 4 தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளும், 2 தொகுதிகளை அதிமுக கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியிருந்தன.
2026ம் ஆண்டும் இதேபோல கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் என 2 தொகுதிகளை தவிர மற்ற 4 தொகுதிகளை திமுக கூட்டணி கட்சிகளும், 2 தொகுதிகளை அதிமுக கூட்டணி கட்சிகளும் கைப்பற்றும் என சத்தியம் டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, கன்னியாகுமரி போலவே கணிசமான அளவு மீனவர்கள் இருக்கின்றனர். எனவே அவர்களின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து கணிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்
திருச்செந்தூர்
விளாத்திகுளம்
ஒட்டப்பிடாரம்
கோவில்பட்டி
என மொத்தம் 6 தொகுதிகள் இருக்கின்றன. இதில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் என வெறும் 2 தொகுதிகளில்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. மற்ற 4 தொகுதிகளிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றின. 2021ல் நிலைமை அப்படியே தலைகீழாக மாறியது. இந்த முறை கோவில்பட்டி தொகுதியை மட்டுமே அதிமுக கூட்டணியால் தக்க வைக்க முயன்றது. மற்ற 5 தொகுதிகளும் திமுக கூட்டணி வென்றது.
2026ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி வாகை சூடும் என்றும், கோவில்பட்டியிலும், விளாத்திகுளத்திலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும், ஒட்டப்பிடாரத்தில் இழுபறி நீடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications