கலெக்டர் அலுவலக மாடியில்.. கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்.. குமரியில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக மாடியிலிருந்து குதிக்க முயன்ற பெண்ணை போலீஸார் பிடித்தனர்.

ராமன்புதூரில் உள்ள பெண்மணி ஒருவர் காணாமல் போன தன் கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்து மூன்று மாதமாகியும் இதுவரை போலீசார் நடவடிக்கை ஏதுவும் எடுக்காததால் மனம் உடைந்த அந்த பெண்மணி இநத முயற்சியில் இறங்கினார்.

woman attempts for suicide in nagercoil collectorate

மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராமன் புதூரில் வசித்து வருபவர் அருள்மேரி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த இவர் ராமன் புதூரில் உள்ள ஜெசிஜோசி என்பவரை திருமணம் செய்து தன் கணவருடன் வசித்து வருகிறார். இருவரும் பிரபல துணிகடை ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர்.

woman attempts for suicide in nagercoil collectorate

தன் கணவர் மீது கொலை வழக்கு ஓன்று காவல் நிலையத்தில் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து இருவருக்கும் இடையே அடிக்கடி இது சமபந்தமாக தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் தன் கணவர் காணமல் போனதாகவும் அவர் கடத்தபட்டாரா ? என்று தெரியவில்லை அவரை கண்டுபிடித்து தருமாறும் நாகர்கோவிலில் நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்து உள்ளார்.

மூன்று மாதங்கள் ஆகியும் அவரை கண்டுபிடிக்க போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடியில் இருந்து கிழே குதித்து தற்கொலைக்கு முயன்ற போது போலீசார் அவரை காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+