காதலி பேசாத ஆத்திரம்.. நள்ளிரவில் நண்பர்களுடன் சைக்கோ தனமான முடிவெடுத்த பாலாஜி.. பயங்கரம்!
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே காதலி பேசாததால் ஆத்திரத்தில் இருந்த இளைஞர், நண்பர்களுடன் இணைந்து குடிபோதையில் முதியவரை எரித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலாஜி என்ற அந்த இளைஞர் நண்பர்களுடன் சேர்ந்து குடித்துவிட்டு முழு போதையாகி உள்ளார். அத்துடன் போதையில் சாலையில் செல்லும் போது சாலையில் அமைதியாக படுத்து உறங்கிக்கொண்டிருந்த முதியவர் மீது காதலி மீதான கோபத்தை காட்டினார்.
நடுரோட்டில் முதியவரை காரணமின்றி எரித்து கொன்றார் பாலாஜி. அவருக்கு நண்பர்களும் உதவி உள்ளார்கள். இப்போது அனைவரும் சிறையில் கம்பி எண்ணுகிறார்கள்,

படுத்து உறங்கினார்
நாகர்கோவில் அருகே இருளப்பபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சந்திரன் (62 வயது). இவர் சனிக்கிழமை இரவு இருளப்பபுரம் சந்திப்பில் உள்ள சாலையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார்.

லைட்டர் வாங்கி எரித்தனர்
அப்போது அங்கு குடிபோதையில் வந்த 5 இளைஞர்கள் முதியவரிடம் லைட்டர் வாங்கி இருக்கிறார்கள். பின்னர் அவர் மீதே தீ வைத்து எரித்துக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டார்க்ள.

பிடிப்பட்டனர்
இதில் முதியவரை கொன்றதாக மதுரையை சேர்ந்த பாலாஜி, லங்கேஸ்வரன், பொன்ராஜ், லட்சுமணன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கோபத்தில் கொலை
பாலாஜி ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.. திடீரென அந்த பெண் பாலாஜியிடம் பேசாததால் ஆத்திரத்தில் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் சென்றபோது சாலையில் படுத்திருந்த முதியவரை கொலை செய்தது தெரியவந்தது.

நாகர்கோவிலில் சோகம்
இதையடுத்து இளைஞர்கள் அனைவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். காதலி பேச மறுத்ததால் சாலையில் உறங்கி கொண்டிருந்த முதியவரை எரித்துக் கொன்ற சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications