என்னங்க சொல்றீங்க.. பேய் துரத்திட்டு வந்துச்சா.. ஆமாங்க.. 3 பேய்.. அப்படியே ஷாக் ஆன போலீஸ்!
கனவில் பேய் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்துள்ளார் இளைஞர்
Recommended Video
நாகர்கோவில்: "மொத்தம் 3 பேய்கள் என்னை துரத்திட்டே வந்துச்சு சார்.. நான் பயந்துபோய் இந்த கிணத்துல குதிச்சுட்டேன்" என்று மிரண்டு போய் பேசும் இளைஞர் சொல்வது உண்மையா? பொய்யா என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.
கன்னியாகுமரி, அயனிவிளை பகுதியில் நாகதேவி கோவில் ஒன்று உள்ளது. இன்று காலை அந்த கோயிலின் பூசாரி பூஜை செய்ய சென்றார். அப்போது கோயிலுக்குள் இருக்கும் கிணற்றில் இருந்து ஒரு சத்தம் கேட்டது. அதனால் அங்கு சென்று கிணற்றுக்குள் எட்டி பார்த்தார்.

கிணற்றுக்குள் இளைஞர் ஒருவர் தண்ணீரில் தவித்தபடி நின்று கொண்டிருந்தார்.. என்னை காப்பாத்துங்க.. என்னை காப்பாத்துங்க என்று கத்தியபடியும் இருந்ததை கண்டு பூசாரி அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த இளைஞரை மீட்க முயன்றார். ஆனால், அந்த கிணற்றில் ஒரு அடி அளவுக்குதான் தணணீர் இருந்தது. பொதுமக்களால் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாததால், உடனடியாக குழித்துறை போலீசாருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தந்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்களும் இளைஞரை மீட்க சற்று போராடினர்.
ஒரு வலையை போட்டு, அதன்மூலம்தான் இளைஞரை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அவருக்கு லேசாக அடிபட்டிருந்தது.. மேலும் அதிர்ச்சியுடனேயே அவர் இருந்ததால், உடனடி விசாரணை ஏதும் நடத்தாமல், முதலில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்தது.. அதன்பிறகு போலீசார் அங்கு சென்று சம்பவம் பற்றி விசாரித்தனர்.
அவர் சொல்லும்போது, "என் பேர் ஸ்டீபன், 34 வயசாகுது.. அயனிவிளையில் தொழிலாளி.. இன்னைக்கு விடிகாலை நான் தூங்கிட்டு இருந்தேன்.. அப்போ எனக்கு ஒரு கனவு வந்தது.. அந்த கனவுல 3 பேய்கள் என்னை துரத்திட்டே வந்தது.. பயந்துபோன நான் வீட்டில் இருந்து ஓடிவந்தேன்.. வேகமா ஓடிவரும்போது, இந்த கிணற்றுக்குள்ளே தவறி விழுந்துட்டேன்" என்றார்.
இதை கேட்டதும் போலீசாருக்கு ஒன்றும் புரியவில்லை.. உண்மையிலேயே கனவுதானா? பேய்தான் துரத்தியதா? பேய்க்கு பயந்துபோய்தான் ஸ்டீபன் கிணற்றில் விழுந்தாரா? அல்லது வேறு காரணமா என்ற விசாரணையில் மேலும் இறங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications