சாதாரண பதவின்னு நினைக்காதீங்க.. அண்ணா வார்டு உறுப்பினராக போட்டியிட்டவர்.. முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

நாமக்கல் : திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சியிலும் நல்லாட்சி என்ற தலைப்பில் நாமக்கல்லில் நடைபெற்று வரும் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார். தற்போது சிறப்புரையாற்றி வருகிறார்.

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பெரியார், அண்ணா போன்றவர்கள் உள்ளாட்சி பதவிகளின் மூலம்தான் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்கள் எனக் குறிப்பிட்டார்.

 நாமக்கல்லில் மாநாடு

நாமக்கல்லில் மாநாடு

தி.மு.க நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டமேட்டில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

மக்களாட்சியின் உயிர்நாடி

மக்களாட்சியின் உயிர்நாடி

இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், "பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல. எத்தனை வீண்பழிகள், தடைகள், அத்தனையையும் தாண்டி பெண்களாகிய நீங்கள் வந்திருக்கிறீர்கள். எவ்வளவு கவனத்தோடு உழைத்து இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறீர்களோ அதே கவனத்தோடு இந்தப் பொறுப்பில் உழைக்க வேண்டும். அமைச்சர், எம்.பி. எம்.ல்.ஏ போல பெரிய பொறுப்பா இது? உள்ளாட்சி அமைப்புகள்தான் மக்களாட்சியின் உயிர்நாடி.

பெரியார் வகித்த பதவி

பெரியார் வகித்த பதவி

உலக சிந்தனையாளர்களில் ஒருவராகப் போற்றப்படக்கூடிய தந்தை பெரியார், ஈரோடு நகர்மன்ற தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் . இந்தியாவில் உயர்ந்த பதவிகளை வகித்த மூதறிஞர் ராஜாஜி சேலம் நகராட்சித் தலைவராக தனது மக்கள் பணியை தொடங்கியவர். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து நல்ல பல திட்டங்களைக் கொண்டுவந்த பெருந்தலைவர் காமராஜர் விருதுநகர் நகராட்சி தலைவராகவே தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

அண்ணா வார்டு உறுப்பினராக போட்டி

அண்ணா வார்டு உறுப்பினராக போட்டி

இந்த மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிட்டவர். இன்று முதலமைச்சராக இருக்கும் நானும் சென்னை மாநகர மேயராக இருந்துள்ளேன். இன்று அமைச்சராக இருக்கும் கே.என்.நேரு லால்குடி நகராட்சித் தலைவராக இருந்தவர். இதையெல்லாம் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

மக்கள் பணிகளின் முதல் படி

மக்கள் பணிகளின் முதல் படி

மக்கள் பணிகளின் முதல் படி என்பது உள்ளாட்சி அமைப்புகள்தான், அந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகத்தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றுவதற்கான பயிற்சிகளைப் பெற முடியும். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதற்கான பயிற்சிப் பாசறையைத்தான் நாமக்கல்லில் இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம். தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும். அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும். அது உங்களின் கைகளில் உள்ளது." எனப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+