அருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை!
கள்ள உறவு காரணமாக தம்பதியை வெட்டி கொலை செய்துள்ளனர்
Recommended Video
நாமக்கல்: கொல்ல வந்த இடத்தில் அண்ணன் இல்லாததால், ஆத்திரத்தில் தங்கையும், அவரது கணவரையும் போட்டு தள்ளி உள்ளார் கள்ள உறவில் சிக்கி தவித்த ஒருவர்!
நாமக்கல், சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்தவர் விமல்ராஜ். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் பழக்கடை வைத்திருக்கிறார். மனைவி பெயர் அனிதா. இவர்களுக்கு 7 மாச பெண் குழந்தை உள்ளது.
நேற்று இரவு காரில் வந்த ஒரு மர்ம கும்பல் திடீரென வீட்டுக்குள் புகுந்து விமல்ராஜ், அனிதாவை சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க வந்த அனிதாவின் தந்தை கருப்பசாமியையும் வெட்டி தப்பிவிட்டது. விமல்ராஜ், அனிதா இருவரும் ரத்த வெள்ளத்தில் பிணமாகினர்.

தனிப்படை
கருப்பசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து.. போலீசுக்கு தகவல் சொன்னார்கள். எதற்காக இந்த தம்பதியை கொன்றார்கள், யார் கொன்றார்கள் என்பது தெரியவில்லை. இதையடுத்து விசாரணை ஆரம்பமானது. 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

பழக்கம்
அப்போதுதான் விவரம் வெளியானது. சேலத்தை சேர்ந்த நிக்கல்சன் என்பவர், இதே நாமக்கல் பஸ் ஸ்டேண்டில் 10 வருடமாக தள்ளுவண்டியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார். அனிதாவின் அண்ணன் அருண் என்பவரும் கோவையில் எலக்ட்ரீசியன் தொழில் கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். இதனால் நிக்கல்சனுக்கும், அருணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பஸ் ஸ்டாண்ட்
அருண் வீட்டுக்கும் அடிக்கடி வந்து போயுள்ளார் நிக்கல்சன். அப்போதுதான் நிக்கல்சன் மனைவியுடன் அருணுக்கு கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. மனைவியை கண்டித்தார்.. ஆனால் மனைவி கள்ளக்காதலை விடவில்லை. இதனால், மச்சினன் விமல்ராஜிடம் சொல்லி அருணை கண்டிக்க சொன்னார். ஏனென்றால் 2 பேருமே பஸ் ஸ்டாண்டில்தான் கடையை வைத்துள்ளனர். அதனால் விமல்ராஜும் அருணை கண்டித்துள்ளார்.

கள்ளக்காதல்
இதனிடையே நிக்கல்சன் மனைவி வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். இது அருண் செய்த வேலையாகத்தான் இருக்கும் என்று நினைத்த நிக்கல்சன், அருணை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். இதற்காக, கூலிப்படையினருடன் அருண் வீட்டுக்கு சென்றார். அங்கு அருண் இல்லை என்றதும், அருணின் தங்கை அனிதா வீட்டுக்கு சென்றார். அங்கே தூங்கி கொண்டிருந்த விமல்ராஜ், அனிதாவை அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு உள்ளனர் என்பது தெரியவந்தது. இப்போது நிக்கல்சன் தலைமறைவாக உள்ளார். அதனால் போலீசார் நிக்கல்சனையும், கூலிப்படை கும்பலையும் தேடி வருகிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications