சிகிச்சைக்கு பணமில்லாமல் புற்றுநோயால் அவதியுற்ற பெண்.. கிராமசபையில் நிதியுதவி செய்த திமுக நிர்வாகி.!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமில்லாமல் தவித்த பார்வதி என்ற பெண்ணுக்கு, திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் சொந்த நிதியில் இருந்து நிதி உதவி செய்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் உள்ள 16,500 ஊராட்சிகளில் திமுக மக்கள் கிராம சபை கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஷ் குமார் கலந்துகொண்டார்.

அதில் கலந்துகொண்ட கிராம மக்கள் வழக்கமான தங்கள் பகுதி குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க, ஒரு பெண் மட்டும் தயங்கியவாறு மருத்துவ உதவி கேட்டார்.
முள்ளுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பார்வதி என்ற அந்த பெண்ணிடம், தயக்கமின்றி என்ன உதவி வேண்டுமானாலும் கேட்கலாம் என்றும் மக்களுக்கு உதவுவதற்காக தான் இந்த கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தக் கூறியிருப்பதாகவும் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
இதையடுத்து தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணமில்லாமல் அவதியுறுவதாகவும் பார்வதி என்பவர் கூறினார். மேலும், தனது குடும்ப வறுமை சூழல் குறித்தும் கிராம சபைக் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.

இதையடுத்து நிகழ்விடத்திலேயே தனது உதவியாளரை அழைத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சிகிச்சைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு அறிவுறுத்தியதுடன் சொந்த நிதியில் இருந்து பண உதவியும் செய்தார்.
மேலும், முதலில் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது என தாம் எண்ணியதாகவும் ஆனால் கிராம சபைக் கூட்டம் மூலம் தனக்கு மருத்துவ சிகிச்சைக்கான உதவி கிடைத்துள்ளதாகவும் புற்றுநோயாளி பார்வதி நெகிழ்ந்துள்ளார்.
-
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு! -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications