அதிர்ச்சியில் ராசிபுரம்.. திமுக பெண் கவுன்சிலர், கணவன், மகளோடு தற்கொலை! அதிர வைக்கும் பரபர பின்னணி
நாமக்கல்: ராசிபுரம் நகராட்சி திமுக பெண் கவுன்சிலர் பிரியா தனது கணவர் மற்றும் மகளுடன் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் தேவிப்பிரியா (வயது 46). இவரது அருண் லால் (வயது 53) நகைக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகளான மோனிஷா (வயது 18) ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

தேவிப்பிரியா ராசிபுரம் நகராட்சி 13 வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இவரது வீடு திறக்கப்படாமலேயே இருந்து உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது தேவிப்பிரியா அவரது கணவர் அருண்லால், மகள் மோனிஷா ஆகியோர் தூக்கிக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த ராசிபுரம் டிஎஸ்பி டி.கே.கே.செந்தில்குமார், போலீஸ் ஆய்வாளர் சுகவனம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேவிப்பிரியாவின் கணவர் அருண்லால் நடத்தி வந்த நகைக்கடை வியாபாரம் கடந்த 6 மாதங்களாக கடும் நஷ்டத்தை சந்தித்ததாகவும் இதன் காரணமாக கடன் சுமையில் தவித்து வந்த குடும்பத்தினர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

கடன் பிரச்சனை ஒரு பக்கம் கழுத்தை நெறிக்க, மறுபக்கம் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு அதிலில் மீள முடியாமல் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளான தேவிப்பிரியாவும் அவரது கணவர் அருண் லாலும் இந்த துயர முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

எனவே பள்ளி மாணவியான தனது மகள் மோனிஷாவுக்கு இரவு விஷம் கொடுத்து உறங்க வைத்துவிட்டு கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் கிடைத்து உள்ளது. ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அதன் முடிவுகள் மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானவுடன் முழு தகவல் தெரியவரும்.












Click it and Unblock the Notifications