உனக்கு 22, எனக்கு ஜஸ்ட் 38.. ஆம்பூரில் போலீசுக்கு தலை சுத்திடுச்சு.. நாமக்கல் ஊராட்சி தலைவியை காணோம்
நாமக்கல்: கடந்த 2 நாட்களாகவே, நாமக்கல்லை கிறுகிறுக்க வைத்துள்ளார் ஊராட்சி மன்ற தலைவி ஒருவர்.. இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் என்றாலும், ஆம்பூரில் குழம்பி போய் விட்டார்கள். என்ன நடந்தது?
ஊராட்சி தலைவர் பதவி என்பது, மிகப்பெரிய அந்தஸ்தும், மதிப்பும் மிக்கது.. அதிக அளவில் பொறுப்புகளை கொண்ட பதவியாகும்.. ஒட்டுமொத்த ஊரின், முக்கிய பொறுப்புகள் அனைத்துமே ஊராட்சி மன்ற தலைவரையே சாரும்..

பொறுப்புகள்: கிராம சபையை கூட்டவும் அதில் தேவையானவற்றை விவாதித்து முக்கிய தீர்மானங்களை இயற்றவும், அப்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் பொறுப்பையும் பெற்றவர்தான் ஊராட்சி மன்றத்தலைவராவார். ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை எந்தெந்த திட்ங்களுக்காக செலவிட வேண்டும் என்று முடிவு செய்பவர் ஊராட்சித் தலைவரே.
தெரு விளக்குகள் அமைத்தல், ஊர்ச் சாலைகள் அமைத்தல், குடிநீர் வழங்குதல் முதல் எண்ணற்ற பொறுப்புகளுக்கு சொந்தக்காரர் ஊராட்சி மன்ற தலைவர்.. இத்தனை தலையாய பொறுப்புகள் இருந்தும்கூட, அனைத்தையும் உதறித்தள்ளிவிட்டு, கள்ளக்காதலில் இறங்கிவிட்டார் ஒரு ஊராட்சி மன்ற தலைவி.. சொந்த ஊரை மட்டுமல்ல, தன்னுடைய கணவரையும் சேர்த்தே உதறித்தள்ளிவிட்டார் அந்த பெண்..
நாமக்கல் பெண்: நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு ஊராட்சியின் தலைவிக்கு 38 வயதாகிறது. கல்யாணமாகி, கணவருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.. ஆனால், அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞருடன் இந்த பெண்ணுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது... இதையடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திடீரென அந்த ஊராட்சி தலைவி, அந்த இளைஞருடன் தலைமறைவாகிவிட்டார்..
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் கணவர், நாமக்கல் போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் வழக்குப்பதிவு செய்து, மாயமான ஜோடியை தேடி வருகிறார்கள். மற்றொருபுறம் ஊராட்சி தலைவியின் செல்போன் சிக்னலை வைத்தும் தீவிரமாக கண்காணித்தனர்.. அப்போதுதான், அந்த சிக்னல் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே ஒரு இடத்தை காண்பித்துள்ளது.
ஊராட்சி மன்ற தலைவி: நேற்றுமுன்தினம் போலீசார் ஆம்பூருக்கு விரைந்தனர்.. ஆம்பூர் அடுத்த தேவலாபுரத்தில், சர்ச் அருகில் சிக்னல் காட்டியது.. உடனே போலீசார் அங்கு விரைந்தனர்.. அப்போது, செல்போனுடன் நின்றிருந்த இளைஞரை போலீசார் சுற்றி வளைத்தனர்.. ஊராட்சி தலைவி எங்கே? என்று கேட்டதற்கு, அந்த இளைஞர் திருதிருவென விழித்தார்.
பிறகு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டபோதுதான், அந்த நபர் தேவலாபுரம் எல்.மாங்குப்பத்தை சேர்ந்தவர் என்பதும், சில நாட்களுக்கு முன்புதான், புது செல்போன் நம்பரை, ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து வாங்கியதாகவும் சொன்னார்..
நடமாட்டம்: அதாவது, சில நாட்களுக்கு முன்பு இன்வேலிட் நம்பராக நினைத்து, எல்.மாங்குப்பம் இளைஞருக்கு இந்த நம்பரை, செல்போன் கம்பெனி வழங்கியிருக்கிறது.. இதற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் இளைஞர் காண்பித்தார்.. இதனால், அந்த இளைஞரை போலீசார் விடுவித்துவிட்டனர். ஆம்பூர் வரை சென்று ஏமாற்றமடைந்த போலீசார், மனம்தளராமல் மீண்டும், மாயமான ஊராட்சி தலைவியை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஜோடி எங்கே இருக்கிறது என்றே இதுவரை தெரியவில்லை.












Click it and Unblock the Notifications