முட்டைக்கு பயங்கர மவுசு.. வரலாறு காணாத அளவில் உயர்ந்த முட்டை விலை.. எவ்வளவு தெரியுமா?
நாமக்கல்: வரலாறு காணாத அளவில் முட்டை விலை உயர்ந்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணையில் முட்டை கொள்முதல் விலை ரூ.5.70 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல், ஈரோடு, சேலம், கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் இங்கு உற்பத்தி ஆகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக, மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக தினசரி லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை நிர்ணயம் செய்து அறிவித்து வருகிறது. கடந்த மாதம் ஒரு முட்டை விலை ரூ. 5.50 ஆக இருந்தது. பின்னர் சரிவு ஏற்பட்டு, இந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, ரூ. 4.75 ஆக இருந்தது. பின்னர் முட்டை விலை படிப்படியாக உயர்ந்து வந்தது.
இன்று மாலை நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் உயர்ந்து ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.70 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, முட்டை விலை அதிகரித்துள்ளது.
முட்டை விலை உயர்வு நாளை காலை அமலுக்கு வருவதாக நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அறிவித்துள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை வரலாற்றில் முட்டை கொள்முதல் விலை 5.70 ரூபாயை எட்டுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்முதல் விலை அதிகரிப்பால், முட்டை சில்லறை விலையும் வெகுவாக உயர்கிறது. சில்லறைக் கடைகளில் முட்டை விலை ரூபாய் 6.25 காசுகள் என்ற அளவில் விற்கப்பட்டு வருகிறது. பண்ணை கொள்முதல் விலை உயர்வால் மேலும் 10 காசுகள் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் என்பதால் பரவலாக இறைச்சி நுகர்வு இந்த மாதத்தில் குறையும். மார்கழி மாதம் தொடங்கியதும் முட்டை விலை மேலும் சரிவடையும். தற்போது, கிறிஸ்துமஸ், புத்தாண்டு நெருங்கும் சூழலில் முட்டை விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications