உயர்ந்த பட்ச விலையில் நாமக்கல் முட்டைகள்.. கறிக்கோழி பண்ணையாளர்கள் பெரிய அதிரடி! இன்று முதல் அமல்
நாமக்கல்: நாமக்கல் முட்டைகளுக்கும் எப்போதுமே பெரும் கிராக்கி உள்ளது.. எனினும், நாமக்கல் மற்றும் அம்மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் முட்டை உற்பத்தி அதிகமாக இருப்பினும், தேசிய மட்டத்தில் மற்றும் மாநில வர்த்தக நிலைகளில் சில்லறை விலை உயர்வு, கொள்முதல் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முட்டை விலை குறித்த முக்கியமான அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன.. கிட்டத்தட்ட 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

இதில் 40 சதவீதம் கேரள மாநிலத்திற்கும், மேலும் தினசரி 30 லட்சம் முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிச்சமுள்ள தமிழக அரசின் சத்துணவு திட்டம் மற்றும் மாநிலத்தின் பிற சந்தைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
நாமக்கல் முட்டைகள்
இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.. ஆனால், சமீபகாலமாகவே முட்டை விலைகள் உயர்ந்து வருகின்றன. அதிலும், தமிழக கோழிப்பண்ணை வரலாற்றில் கடந்த 55 வருடங்களாக இல்லாத வகையில் முட்டை விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை ஒன்றின் விலை ரூ 7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்லில் நடந்த NECC கூட்டத்தில் முட்டையின் விலையை 5 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை கொள்முதல் விலை ரூ.6 ஆக உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை இன்று நவம்பர் 17ம் தேதி காலை முதல் அமலுக்கு வருவதாக அறிவித்திருந்தது.
NECC எனப்படும் நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு, இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.95லிருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய விலை இன்று நவம்பர் 17ம் தேதி காலை முதல் அமலுக்கு வருகிறது" என்று அறிவித்துள்ளது.
முட்டையின் விலை
முட்டையின் கொள்முதல் விலை கடந்த சில தினங்களாக உயர்ந்து கொண்டே வருவதால் கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். எனினும், இனி வரும் நாட்களில் முட்டைகள் உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரிப்பு காரணமாக முட்டையின் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. கொள்முதல் விலை உயர்வாலும் சில்லறை விலை உயருமா? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.
குளிர் காலத்தில் விலை அதிகம்
பெரும்பாலும், குளிர்கால நேரங்களில் முட்டைக்கு தேவை அதிகமாகவே இருக்கும்.. எனவே குளிர்காலத்தில் முட்டையின் விலையும் அதிகமாகும் என்பதால், அந்த கலக்கமும் அதிகரித்துள்ளது.. எனினும், கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவு அதிகரித்தல் போன்ற காரணங்களால் முட்டை இந்த உயர்வுக்கு பின்னணியாக உள்ளதாக பண்ணையாளர்கள் கூறுகிறார்கள்.
ஏற்கனவே கோழி, ஆடுகள் விலை அதிகமாக இருக்கின்றன.. எனினும் புரோட்டீன் தேவைக்காக முட்டையை குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய தேவையில் உள்ளனர்.. எனவே, இந்த கொள்முதல் விலை உயர்வு சாமானியர்களை பாதிக்காதவகையில் இருக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகிறார்கள்.
முட்டை விலை குறையுமா
விலை நிலைத்தன்மை குறைவாக இருந்த நிலையில், தற்போதைய உயர்வு உற்பத்தியாளர்களின் நிதி நிலையை வலுப்படுத்தும். அதே நேரத்தில், அதிக வருமானம், கோழி உணவு, மருந்துகள் மற்றும் பராமரிப்பு செலவுகளை முழுமையாக ஈடுபடுத்துவதற்கும் உதவுகிறது.
நாமக்கல்லில் 6 ரூபாய் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான கடைகளில் 7 ரூபாய்க்கு முட்டைகள் விற்கப்படுவதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.. பொருளாதார சுமை அதிகரித்து வரும் நிலையில், உணவு பொருள் விலை உயர்வு, அதிலும் சத்தான முட்டையிலும் விலை உயர்வு காணப்படுவது கவலைகளை ஏற்படுத்தி வருகிறது.
-
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்!












Click it and Unblock the Notifications