Egg Rate: 40 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்.. தமிழகத்தில் ரூ. 8ஐ தொடும் முட்டை விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்
நாமக்கல்: தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டு இருக்கிறது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.15ஆக உயர்ந்துள்ளது. 40 ஆண்டு கால வரலாற்றில் முட்டை விலை இந்தளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல்முறையாகும்.
புரத சத்துக்கு முக்கியமான சோர்ஸ் ஆக இருப்பது முட்டைகள் தான். இதனால் தான் பல்வேறு தரப்பினரும் முட்டையைத் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இன்று முட்டை விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்குப் புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.6.15ஆக உயர்ந்துள்ளது. 40 ஆண்டு கால வரலாற்றில் முட்டை விலை இந்தளவுக்கு உச்சம் தொடுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 21ம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.6.10ஆக இருந்தது. அதை மிஞ்சும் வகையில் இப்போது முட்டை விலை ரூ.6.15ஆக உயர்ந்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் முட்டை விலை ரூ.7.50 முதல் 8 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.
வழக்கமாகவே குளிர் காலத்தில் முட்டை உற்பத்தி குறையும். மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்காக கேக் செய்ய பேக்கரிகள் முட்டைகளை அதிகளவில் வாங்கும். இதனால் புத்தாண்டு முடியும் வரை முட்டை விலை அதிகமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications