தந்தை மரணம்.. அதிர்ச்சியில் மகளும் இறந்தார்.. நாமக்கல் அருகே சோகம்!
ராசிபுரம் அருகே தந்தை இறந்த அதிர்ச்சியில் மகள் உயிரிழந்தார்.
நாமக்கல்: தந்தை இறந்த அதிர்ச்சியில் மகளும் உயிரிழந்த சம்பவத்தினால் அந்த கிராம மக்கள் ரொம்பவே உறைந்து போய் உள்ளனர்.
ராசிபுரம் அருகே உள்ள ஊர் கூனவேலம்பட்டி புதூர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் துளசிராமன். இவரது மகள் அம்பாயி. இவருக்கு 15 வருஷங்களுக்கு முன்பு திருமணம் நடந்து விட்டது.

ஆனால் கணவனுடன் பிரச்சனை காரணமாக சண்டை போட்டுக் கொண்டு அம்மா வீட்டுக்கே அம்பாயி வந்துவிட்டார். பிறகு முறைப்படி கோர்ட்டில் விவாகரத்தும் பெற்றுவிட்டார்.
இந்நிலையில் துளசிராமனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. கிட்னி பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர அளிக்கப்பட்டும், அது பலனளிக்காமல் துளிசிராமன் இன்று காலை இறந்துவிட்டார்.
இதையடுத்து ஆஸ்பத்திரியில் இருந்து துளசிராமன் உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அப்போது தந்தையின் சடலத்தை பார்த்த அம்பாயி அப்படியே உறைந்து போய் நின்றார். பின்னர் தந்தையின் உடல் மீது அதிர்ச்சியுடன் சாய்ந்தார். அதோடு சரி... தந்தையின் மீது சாய்ந்தபடியே மகளின் உயிரும் பிரிந்தது.
இதனால் கிராம மக்கள் இன்னும் அதிர்ச்சியடைந்தனர். அடுத்தடுத்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications