நாமக்கல் அருகே கோர விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாப பலி
நாமக்கல்: நாமக்கல் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் திருச்சியைச் சேர்ந்த பொதுப்பணித் துறை பொறியாளர், அவரது மனைவி, குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி டோல்கேட் ஷீரடிநகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (37). இவர் பொதுப்பணித் துறையில் பாசன ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு தேவிப்பிரியா (34) ன என்ற மனைவியும், சாய் கிருபா என்ற இரண்டு வயது குழந்தையும் உள்ளனர். இவரது குழந்தை சாய் கிருபாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால், பெங்களூரில் உள்ள ஆயுர்வேத மருத்துமனை ஒன்றில் சிகிச்சைக்காக தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.
இவர்களுடன் அசோக்குமார் உறவினர்கள் ராஜாமணி (65), கோமதி (60) ஆகியோரும் சென்றுள்ளனர். இவர்களது காரை அசோக்குமார் ஓட்டிச் சென்றுள்ளார்.

மருத்துவமனை சென்றுவிட்டு திருச்சி திரும்பியபோது, சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், நாமக்கல் அருகே களங்கானி ரெட்டிப்புதுாரில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் அசோக்குமார், அவரது மனைவி தேவிப்பிரியா, குழந்தை சாய் கிருபா மற்றும் உறவினர்கள் ராஜாமணி, கோமதி ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 5 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சாலையோரம் நின்றிருந்த லாரி ஆந்திராவில் இருந்து மதுரைக்கு பருப்பு லோடு ஏற்றி வந்துள்ளது.
அதன் ஓட்டுநர் தஸ்தகீர் ஓய்வெடுப்பதற்காக லாரியை சாலையோரம் நிறுத்தி இருந்துள்ளார். விபத்து குறித்து புதுச்சத்திரம் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications